blood diamond(வைர வேட்டை)+பார்த்ததில் பிடித்தது

  • 0
                                                                         இந்தப்படம் 2006 ம் ஆண்டு வெளிவந்தாலும்(blood diamond) இந்தப்படத்தை கடந்த திங்களன்று என்னால் பார்க்க முடிந்தது. இச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்த எனது நண்பன் ஆதவன் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் இந்த படத்தில் வருகின்ற நிகழ்வுகள் எல்லாத்தையும் பார்க்கின்ற பொழுதுதான் ஒரு தனி மனிதரின் வாழ்வில் உள்ள துயரங்கள், குடும்ப பாசங்கள் ,ஏழ்மை நிலை எல்லாவற்றையும் அறிய முடிகிறது 

                                      இந்த படத்தில் வருகின்ற கதாநாயகன் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.அத்துடன் titanic போன்ற வெற்றி படங்களில் நடித்த Leonardo DiCaprio வின் நடிப்பு படத்தை மேலும் வெற்றி பெறச் செய்தது
                                    ஆபிரிக்கா நாடுகளில் ஒன்றான கென்யாவில் தனது வாழ்க்கையை மேற்க்கொண்டு வரும் Solomon Vandy குடும்பத்தில் Solomon Vandy தனது மகன் மீதன நம்பிக்கையை மிகவும் வைத்திருந்தார் அத்துடன் ஒரு நாள் தனது மகனை புரட்சிகாரரிடம் தவற விட்ட Solomon Vandy தனது வாழ்வை வைர சுரங்கத்தில் களித்து கொண்டிருந்தார் அப்போது அவரின் கண்ணில் பட்டதுதான் ஒரு வைரம் அதை வைத்து கதையை மிகவும் எழிமையாக நகர்த்தி கொண்டு செல்கிறார் இயக்குனர்

                                      அப்போது அங்கு வந்த வைரம் கடத்தும் கும்பலுடன் மாட்டிக்கொள்ளும் Solomon Vandy  கதாநாயகன்  Danny Archer (Leonardo DiCaprio) யுடன் இனையும் இடதில் இயக்குனர் கதையை வெகுவாககூறியுள்ளார் அத்துடன் தனது மகன் புரட்சிகாரரிடம் சென்று தானும் அவ்வாறு மாறியதை நினைத்து Solomon Vandy படும் வேதனைகளை பட்டும் படாமலும் கூறிஉள்ளார்.அத்துடன் ஒரு பத்திரிகையாளரின் படம் என்பதையும் கூறலாம்
                            கொலையாளிகள் யார்? எதற்க்காக கடத்தப்படுகிறார்கள்? கொலை செய்யப்படும் ஆட்களின் பின்னனி என்ன என்பது விறுவிறுக்கவைக்கும் இறுதிக்காட்சி.அத்துடன் Danny Archer (Leonardo DiCaprio) ற்க்கும் Maddy Bowen (Jennifer Connelly) இடையில் மலரும் காதல் கதையை எந்த அளவுக்கு அழகியல் ரசனையோடு சொல்ல முடியுமோ அந்தளவுக்கு மென்மையாகச்சொன்னதற்காகவே இயக்குனர் 

Edward Zwick பாரட்டுக்குரியவர் ஆகிறார்.



 

  எத்தனை எத்தனை கதைகளை சொல்லுகின்ற இந்த திரைப்படத்தில் கடைசியில் கதாநாயகன் பற்றி எந்த முடிவும் கிடைக்க முடியவில்லை போல எனக்கு தோன்றுகிறது அத்துடன் யார் வென்றார்கள்? யார் தோற்றார்கள்? என்பது விசயமல்ல இந்த படம் சமூகத்திற்க்கு எவ்வளவு முக்கியமானது என்பதுதான் முக்கியம். ஒரு நாட்டினுடைய வளம் அந்த நாட்டின் வளர்ச்சிக்கு எவ்வளவு முக்கியம் என்பதையும் அதனை மற்றைய நாடுகள் சூறையாடுவதையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் கூறியுள்ளது.
                   
                அத்துடன் எனது இந்த விமர்சனத்தை முடித்துக்கொள்கிறேன்.நீங்களூம் பார்க்க வேண்டும் என்பதற்காக நானே எல்லாத்தையும் சொன்னால் அதிலே ஒரு கிக்கும் இருக்காது.
                             என்றும் (MS)
                        **********      **********





No comments:

Post a Comment