அம்மாவின் பிறந்தநாள்

  • 0

அம்மாவின் பிறந்தநாள்

I love my Mom

என்ன அம்மாவை பற்றி பேசுறேன்னு யோசிக்கறிங்க‌ போல ஆமாங்க இன்று ரொம்ப முக்கியமான நாள் எனக்கு...

இன்று என் அம்மாவின் பிறந்த நாள்!!!

அம்மாவாய் மட்டும் அல்ல இன்று வரை எனக்கு நல்ல தோழியாகவும் என்னை வழிநடத்துபவர்!!!


அம்மாவின் பிறந்தநாள்

ஆயிரந்தான் கவிசொன்னேன்
அழகழகாய் பொய் சொன்னேன்
பெத்தவளே ஒம் பெருமை
ஒத்தவரி சொல்லலையே!

எழுதவோ படிக்கவோ
ஏலாத தாயப்பத்தி
எழுதி என்ன லாபமின்னு
எழுதாமப் போனேனே!
என்ற முத்தான வரிகளை கேட்டவுடன் மூச்ச்டைந்து நின்றேன்.

என்னை சுவாசிக்க வைத்த
அவளுக்காக நான்
வசித்த முதல் வார்த்தை
"அம்மா".


அம்மாவின் 48 வது அகவைக்காலம் சிறப்பாக இருக்க 
இறைவனை வேண்டி நிக்கிறேன் என்னால் அம்மாவுக்கு உதவிகள் தான் செய்ய முடியாமல் போனாலும் உபத்திரம் செய்ய கூடாது எண்டு நினைத்துக்கொண்டு இந்த வாழ்த்துரையை எழுதுகிறேன்.

                      நான் வாழும்வரை,உன்னையும்வாழவைப்பேன்

உலகில்
அனைத்துக்கும்
வரையறை வைத்திருக்கும்
அந்த கடவுள்,
உன்னை அழைத்திடவும்
உன் புகழ் பாடிடவும்
என்னை கோடிட்டு
நிறுத்தி விடவில்லை!


மூன்றே சொற்களில்
பலநூறு பூக்களின்
வண்ணமாய்
என்னில் கலந்த‌
என் தேவதை
அம்மா!!!

(இன்று என் அம்மாவின் பிறந்தநாள்.. அவர் என்றும் நலம் வாழ இறைவனை பிராத்திக்கிறேன்..அம்மாவுக்காக ஒரு சின்ன சமர்பணம்...)