இங்கிலாந்தில் இந்தியா!.......

  • 0


இந்தியா வரலாற்றில் அதிலும் குறிப்பாக டோனியினுடைய காலத்தில் கண்ட மிகப்பெரிய தோல்வி இதுதான் இத்துடன் நான் ஒரு இந்தியா ரசிகன் என்பதால் இந்த தோல்வியையும் அதனுடைய விளைவுகளையும் சிறு அலசல் போடலாம் என்று நான் நினைக்கிறேன்.இந்தத்தொடர் முடிந்த பிறகு வெட்டியாய் வீட்டில் இருந்த போது ஒரு சில பத்திரிகைகளை வாசித்ததுண்டு அதிலே குறிப்பாக மும்மூர்த்திகளின் ஓய்வுகளுக்குப்பிறகு என்ன இந்தியா செய்யப்போகிறது?........  என்ற தலையங்கங்களை காணக்கூடியதாக இருந்தது.இந்த இடுகையின் நோக்கம் இந்தியா அணியின் தோல்வியின் பின்னர் இந்தியா அணியில் ஏற்ப்பட போகும் மாற்றங்களும் அதனை எவ்வாறு நிவர்த்தி செய்யப்பபோகிறாற்கள் என்ற ஒரு பார்வையாக உள்ளது 
இந்தியா அணியை பொறுத்தவரையில் சற்றும் மனம் தளராத அணியாக காணப்படுகிறது லச்மன் டிராவிட் சச்சின் ஆகியோரது ஓய்வுகள் இந்தியா அணிக்கு பாரிய பின்னடையை எதிர் நோக்கும் என்பது எல்லோரது கருத்தும் அவ்வாறு இருந்த போதும் அதனை நிவர்த்தி செய்வதற்காகவே இளம் வீரர்கள் இந்தியா அணியில் கண்டறியப்பட்டுள்ளார்கள் கொஹ்லி,சர்மா போன்றோரது வருகையின் பின்பு எழுச்சி பெற்று விடும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது
இந்தியா அணியை பொறுத்தவரையில் முன்னைய அணித்தலைவர்களின் கருத்துக்கள்

கும்ப்ளே:
                 இந்தியா அணியில் புதிய இளம் வீரர்கள் இனம் காணப்படவேண்டும் என்றும் அவர்கள் மிகக்குறுகிய காலத்தில் டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்ற வேண்டும் என்பதும் அத்துடன் பங்குபற்றினால் தான் மூத்த வீரர்களது இழப்புக்களை ஈடு சிய முடியும் எனவும் கூறினார் அத்துடன் அவர்களது கருத்துப்படி இந்தியா அணியை பொறுத்தவரையில் பந்து வீச்சாளர்களை தேர்வு செய்ய வேண்டும் எனவும் கூறினார் 

கங்குலி;

             தாங்களும் இந்த மைதானங்களில் தான் ஆடினோம் அதனால் இந்த தோல்வி பற்றி எந்த காரணமும் கூற முடியாதென இந்தியா பயிற்றுனருக்கு கூறியிருந்தார் இந்த ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தாலும் நாங்களும் இந்த ஆடுகளங்களில் வெற்றிகளை சுவைத்தோம் என்றும் அத்துடன் எல்லோரது கருத்துப்படி இளம் வீரர்கள் தேர்வு செய்யப்படவேண்டும் எனவும் கூறினார்

               இவ்வாறு கூறியதை தொடர்ந்து இந்தியா அணித்தலைவர் தாங்கள் ஒருபோதும் தோல்வியால் துவளவில்லை மீண்டும் சாதிப்போம் என்று கூறியது எனக்கும் அத்துடன் இந்தியா ரசிகர்களுக்கும் பாரிய வரப்பிரசாதமாக காணப்படுகிறது அத்துடன் இந்த தொடர் இந்தியா அணிக்கு பாரிய சவாலாக அமைந்தது அத்துடன் சச்சின் போன்றோர்கள் நன்கு கற்று கொண்டுள்ளனர் என கூறுவது எந்த வகையிலும் எடுபடாத கூற்றாக காணப்படுகிறது இந்தியா அணியை பொறுத்தவரையில் பந்து வீச்சாளர்கள் மற்றும் துடுப்பாட்ட வீரர்களது மோசமான நிலைகளாலே இந்த பாரிய தோல்வி ஏற்ப்பட்டது அத்துடன் இது பற்றி பந்து வீச்சாளர்களை குறை கூற முடியாது ஏன் எனில் துடுப்பாட்ட வீரர்களால் 350 ஓட்டங்களுக்கு மேல் எந்த ஒரு இன்னிங்ஸ்யிலும் பெற முடியாமல் போனது ஒரு காரணமாகும் அத்துடன் டிராவிட் இந்த தொடரில் மொத்தம் 450 ஓட்டங்களுக்கு மேல் பெற்று தொடர் ஆட்ட நாயகன் விருது பெற்றது மிகவும் மகிழ்ச்சி அழிக்கிறது அத்துடன் இந்த தொடர் தோல்விக்கு வீரர்களது காயங்களும் அவர்களது விலகலுமே காரணமாகியது 
      அத்துடன் ஹர்பஜன் சிங் இந்த ஆண்டு மோசமான ஆட்டங்களை வெளிப்படுத்தி வருகிறார் அத்துடன் அவர் முரளிக்கு நிகராக ஒப்பிட்டு வந்தவர்களுள் ஒருவர் ஆவார் அத்துடன் இந்த தொடரில் அவரால் ஒரேஒரு விக்கெட் மட்டுமே கைப்பெற்ற முடிந்தது அத்துடன் மாஸ்டர் துடுப்பாட்ட வீரரான சச்சின் ஆல் ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் போனது வருத்தம் அழிக்கிறது 
   இவ்வாறு ஒட்டு மொத்த அணியின் குழம்பல்களாலே இந்தியா அணி தனது முதல் இடத்தில் இருந்து சறுக்கியுள்ளது இது தொடர்ந்து தொடருமா?......................இந்ததோல்வியுடன்முடிவுபெற்றுவிடுமா?...............பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

No comments:

Post a Comment