எனது வலை பூ உருவான கதை

  • 0

I LOVE BLOGGING , இந்த வலை பூவுக்குள் நான் விழுந்த கதையை உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன்.
2011 /05 /01 இல் எனது கனவை உங்கள் கண் முன் கொண்டுவந்த நாள் இதுவே இதன் மூலமாக எனது கருத்துக்களை சுதந்திரமாக வலை உலகில் பறக்கும் படி செய்த நாளும் இதுவே இதனால் என்னை ஒரு பதிவாளராக உருவாக்கியது இந்த நாளே இவ்வாறு பலவிதமாக எனது செயற்ப்பாடுகளை ஒருங்கமைத்த நாளும் இதுவே ............
இந்தநாளை எனது வாழ்வில் மறக்க முடியாத நாளாக நான் கருதுகிறேன்
நான் சாதாரண தரம் எடுத்து பரீட்சை முடிவுக்காக காத்திருந்த வேளையில் எனது கண்ணில் பட்டதுதான் இந்த அருமையான வலை உலகம் இந்த வலையில் எனது தடத்தினை பதித்த முதல் நாள் எனக்கு என்ன இதில் தருவது என்று ஒன்றும் தெரியவில்லை அப்பொழுது I.P.L போட்டி நடை பெற்றுவந்தது அதிலே எனது ஆதரவு அணியாக காணப்பட்ட சென்னை அணியில் எனது முதல் இடுகையை இட்டேன் அத்துடன் எனது பாடசாலை நாட்களில் எனது நண்பர்கள் இதற்கு ஆதரவு அளித்தபடியாலும் என்னை இன்று ஒரு இலக்குடன் செயற்ப்பட வைத்த எனது நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்
அத்துடன் முன்பு என்னக்கு வலை உலகில் ஆசை இருந்தபடியாலும் என்னால் இதனை சிறப்பாக செய்யமுடியும் என்ற நம்பிக்கை இருந்தபடியாலும் என்னை காணும் நண்பர்கள் இதனை (blog) எப்படா ஆரம்பிக்கப்போகிறாய் என்று அடிக்கடி கேட்ட படியாலும் எனது உணர்வுகளை எழுத்துமூலமாக இன்குதர வைத்தது.
அத்துடன் நான் தரம் 10 இல் படிக்கும் பொழுது பார்வை இட்ட சில வலை பூக்களையும் அதிலே அவர்களுடைய நகைச்சுவைகளையும் அத்துடன் குமுறுகின்ற சில பதிவுகளையும் பார்த்து ரசித்த நாள்கள் எத்தனையோ! இவ்வாறு எனது அடி மனதில் எழும்பிய இந்த ஆசை நான் இப்போது உங்கள் முன் இந்தப்பதிவுகளை தருவதற்கு அத்திவாரமாக இருந்தது
நான் பாடசாலை நாட்களில் ஒரு சில கவிதைகளை,கதைகளை வரைந்ததுண்டு அப்பொழுது செய்யாத சில விடையங்களை இப்பொழுது செய்வதை
எண்ணி மகிழுகின்றேன் எனக்கு facebook இல் மீதான அதிக நாட்டமும் தமிழிலே தட்டச்சு செய்வதனாலும் எனது இந்த வலை அமைப்பை எழுதுவதற்கு மிக உதவியாக இருந்தது.
நான் அளவெட்டியில் உல்லாசமாக திரிந்த வேளையில் facebook இல் இருந்ததுதான் அதிகம் இப்போது வலைப்பூவில் உள்ள ஆர்வம் முன்பும் இருந்தது இருந்தும் என்னோடு கூடப்பிறந்த சோம்பலும் அலுப்பும் இதனை தடுத்து நிறுத்தியது மீண்டும் இந்த வலைப்பூ பூக்கும்.
மீனவர் வலையில் மீன்கள் எனது வலையில் நீங்கள்.

No comments:

Post a Comment