போலிப்போராட்டம் தேசத்துக்கா! தேகத்துக்கா!

  • 0
பலநல்ல கற்க கடைந்தும் மனம் நல்லார் 
ஆகுதல் மாணார்க்கு அரிது 

என்ற வள்ளுவன் வாக்கிற்கு ஏற்ப வாழுபவர்களே அதிகம்

ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் போராட்டங்கள் நடத்தும் எந்த தலைவரையும் கேட்டுப்பாருங்கள் எதற்கு இந்த அணிவகுப்பு ஏன் இந்த கோஷம் கொடிபிடிப்பு கலாட்டா?

உடனே மைக்கை பிடித்து உலகத்துக்கு அறிவிப்பார்கள் எங்கள் அற போராட்டம் (அல்லது இந்த அவல நிலை,குறைகள்,கோரிக்கைகள் ) இவை குறித்து மக்கள் கவனத்தை ஈர்ப்பதற்கு ஊர்வலம் நடத்துகிறோம்  என்று
முக்கிய வார்த்தையாக கவனத்தை ஈர்ப்பதற்கு.கவனத்தை ஈர்ப்பதற்கு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன


முக்கியம் கவனத்தை ஈர்ப்பதற்கு ஆக நடத்தப்படும் கலகங்களில் அவர்கள் தங்களது கவனத்தை இழந்து விடுகின்றனர் உலகமே நோக்கும் கலகங்களை உருவாக்குபவர்களே தங்களை உலகம் கவனிக்கும் என்றதை மறந்து உதவாதவர்கள் ஆகின்றனர்

எனது வெளிநாட்டு நண்பர்களை இக்காலப்பகுதியில் நான் கண்டது அதிகம் அவர்களிடம் இதை பற்றி நாட்டு மக்களை பற்றி நடத்தப்படும் போராட்டங்களை பற்றி விசாரிக்கும் போது அவர்கள் சொன்னதை கேட்டு திகைத்தேன் சிந்தித்தேன் அன்று எடுத்த முடிவுதான் இது எம் இனத்தில் மட்டும் அல்ல உலகம் முழுவதும் நடத்தப்படும் உண்மை நாடகமும் இதுவே இதன் விளைவே இந்த பதிவின் உருவாக்கம்

அவர்கள் சொன்னார்கள் நண்பா எல்லாம் எங்கள் ஆக்களின் சந்தோசத்துக்கு என்று


வேளைகளில் இருந்து விடுமுறை எடுக்கவும்
மது,மாது போன்ற பாவனைக்களுக்குமே


போராட்டம் என்ற பேரில் போர்த்தப்படும் போர்வையை பயன்படுத்தி தேகத்திற்கு உருவாக்கப்படும் ஒரு சந்தோசமே என்று


நாட்டு மக்கள் நாடு படும் பிரச்சனைகளை தங்களுக்கு சாதகமாக பயன் படுத்தி அதில் குளிர்காயும் புலம் பெயர் வாழ் மக்களே உங்கள் நாட்டு பற்று உண்மை எனில் உதவி செய்யாவிடினும் உபத்திரவம் செய்யாமல் ஆவது இருங்கள்

இது அனைவருக்கும் அல்ல ஒரு சில நாதாரிகளுக்கே

கண்ணா உலகம் இன்று சுருங்கி விட்டது வெளி உலகிற்கு ஒன்றும் தெரியாது என்று நினைத்து செய்து கொண்டு இருக்கும் சமூக விரோதிகளே இனியாவது செய்வன திருந்த செய்யுங்கள்

பலருக்கு பெரிதும் அனுதாபங்கள் தேவைப்படுகின்றன தங்களை பிறர் கவனிக்க வேண்டும் என்று விரும்பிகள் அதை நிறைவேற்றி கொள்ளும் பொருட்டு ஏதாவது மனக்குறை நோயை வரவழைக்கின்றனர்.தங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களும் நண்பர்களும் தங்களை அலட்சியம் செய்வதாக அவர்கள் உணர்ந்து இது போன்ற உள்மன தேவைகளை பெறும் பொருட்டு இது போன்ற நிகழ்வுகளில் ஈடுபடுகின்றனர்


அங்கேயே பிறந்து வளர்ந்தவர்களிடம் கூட இருக்கும் நல்ல எண்ணங்கள் இங்கிருந்து நாட்டு மக்கள் படும் கஷ்டங்கள் எல்லாவற்றையும் பார்த்து வெளி நாடுகளுக்கு சென்றவர்கள் கூட இல்லை (அவர்கள் தான் படு மோசம்)

இது போன்ற உள்மன (மது,மாது) தேவைகளை பூர்த்தி செய்ய விரும்பினால் வேறு பேரில் ஏதாவது நிகழ்வுகளை நடாத்தி அதை நினைவேற்றி கொள்ளுங்கள் உங்கள் நாட்டின் பேரிலும் உங்கள் உறவினர்கள், உடன்பிறப்புகளின் பேரிலும் போலியான போர்களை தொடுத்து ஏன் இவ்வாறு செய்கின்றீர்கள்

உங்களுடைய சொந்த உலகத்தில் பூ பூக்க வேண்டும் என்று நினைத்தால்  ஒவ்வொரு மனிதனின் கவனத்தேவையையும் நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும் கவனம் செலுத்துபவர் போல் தோற்றமளித்தால் மட்டும் போதாது வெளி உலகிற்கு உங்கள் போலிப்போர்வையை மூடி மறைக்க பாருங்கள்

இக்காலத்தில் தொலைக்காட்சிகளிலும் இணையங்களிலும் அதிகம் தங்களை புகழ வேண்டும் என்று நினைத்து போராட்டங்களை நிகழ்த்துவோர் உங்களை விமர்சிப்பவர்கள் தனக்குள் சேர்த்து வைத்திருக்கும் உணர்சிகளை வெளிக்காட்டுகின்றனர்

சமூக சாதனங்கள் (மீடியா) உங்களை விமர்சித்து சுக்குநூறாக்குவதன் மூலம் விமர்சகர்கள் தங்களை உயர்த்தி கொள்கின்றனர்  (அவர்களே உங்களை சில நேரம் தூண்டி விட கூடும் )

இதுதான் இன்றைய உலகம்,

உலகம் உங்களை நோக்குகிறது மறக்காதீர்

தங்கள் போராட்டங்களை நடத்தி படங்களை எடுத்து நாட்டு மக்களுக்கு அனுப்புவோர் இவ்நாட்டில் மக்கள் ஒன்றும் தெரியாதவர் என்று நினைக்காதீர் நீங்கள் செய்யும் போராட்டங்களின் அச்சுமுதல் ஆணிவேர் வரை இன்றைய மக்கள் நன்கு அறிவார்

அவர்களில் சிலர் நாட்டு மக்கள் தங்கள் மகன் ,மகள் போராட்டம் நடத்தினார்கள் என்று பீத்தி அடிப்பவர்களும் உள்ளனர் இல்லை என்று இல்லை இனியாவது கொஞ்சம் திருந்துங்க


அன்புள்ள போராட்டகாரர்களே நீங்கள் 1000 பேர் தேவை இல்லை 10000 பேர் தேவை இல்லை ஒருவர் செய்தாலும் உண்மையும் உன்னதத்துடனும் செய்யுங்கள்

இயங்கும் சக்தி சிறியதாய் இருப்பினும் பெரிய பொருளையும் நகர்த்திவிடும் -எதிர்ப்பு சக்தி இல்லாத பட்சத்தில்

எதிர்ப்பு சக்தி = கெட்ட நபர்கள்

காந்தி கூட சுதந்திரம் பெற்றது தனி மனிதராகத்தான்

இதனை இதனான் இவன் முடிக்கும் என்றாய்ந்து 
அதனை அவன் கண் விடல்

இது எல்லோர்க்கும் அல்ல ஒரு சில மக்களுக்கே

படங்கள் இணையத்தில் இருந்து பெறப்பட்டவை