barn buddy யும் மிதி வெடியும்

  • 0

இன்று முளைத்த பிஞ்சுகள் முதல் பல்லுப்போன கிழவி வரை முகப்பு புத்தகம் வைத்திருப்பது உலகளவில் அறிந்த உண்மை தான் இருந்த போதும் இதன் மூலம் விவசாப்புரட்சி ஒன்று உருவாகிஉள்ளது என ஆய்வாளர்களின் ஆய்வின்படி தெரியவந்துள்ளது.ஏன் எனில் எல்லோரது கணக்கிலும் barn buddy எனும் இணைய பொழுதுப்போக்கு விள்ளையாட்டு உள்ளது.இதனை இவர்கள் பொழுதுபோக்கு அம்சமாக கருதுவதில்லை.ஏன் எனில் எனக்கு ஒரு நல்ல அனுபவம் உள்ளது.

                                   
                                அன்று ஒருநாள் எனது முகப்புத்தகத்தில் நான் எனது barn buddy விளையாட்டில் எனது நாய்க்கு உணவு வைக்க மறந்துவிட்டேன் அதனால் அது நன்றாக அயர்ந்து தூங்கிவிட்டது இதனால் நண்பன் farm நமது farm எனக்கருதி அதிகாலை எழும்பி என்னுடைய farm இல் நன்றாக ஆட்டையை போட்டுவிட்டார் இதை நான் கவனித்தேன்(எனது பண்ணையில் ஆவாஸ் அஞ்சின்ங் என்றும் போட்டிருந்தேன்)
         அதிகாலையில் படிப்பதற்கு கூட எழும்பாத அந்த நபர் அலாரம் வைத்து எழும்பி எனது பண்ணைக்குள் தனது கை வரிசையை காட்டியுள்ளார்.இதிலிருந்து அவரின் கடமை உணர்ச்சியை மெச்சுகிறேன்.
   அத்துடன் இன்னுமொரு அனுபவம் உள்ளது அது என்னவென்றால்:
               ஒருநாள் வந்த நண்பன் நான் இன்று எனது பண்ணைக்கு போகவில்லை என்றும் அதிலே நான் நிறைய பணம் உழைப்பதாகவும் அதில் வரும் பணத்தில் ஆடு,மாடு வேண்டுவதாகவும் கூறினார் அத்துடன் நான் ஒரு credit card வைத்துள்ளதாகவும் கூறினார் நான் அதிலே ஒரு கணம் திகைத்தேன் பின்புதான் நன்றாக விசாரித்தபோது அவர் சொன்னது எல்லாம் barn buddy எனும் அந்த மிதிவெடி என்று.
       அத்துடன் சில நண்பர்கள்

                               காலை எழுந்தவுடன் barn buddy பின்பு 
                       கனிவு கொடுக்கும் நல்ல city ville 
                             மாலை முழுதும் farm ville -என்று 
                        வழக்கப்படுத்தும் சில நண்பர்கள்
 
என்று சிலர் இந்தக்கட்டமைப்புக்குள் வாழ்ந்தவண்ணம் உள்ளனர் 
                   இதனால் இது பலருடைய வாழ்வில் மிதிவெடி என்று நான் கருதுகிறேன் மிதி வெடியில் கூட கால் வைத்து எடுத்தால்தான் வெடிக்கும் அனால் இதை Allow பண்ணினாலே இருப்பதெல்லாம் பறக்கும் கொஞ்சம் கண் அயர்ந்தால் போதும் எழும்பி விடுவார்கள் தமது தொழிலுக்கு அதிகாலையில் 


குறிப்பு: நான் அன்று அதனை போலீஸ் நிலையத்துக்கு அறிவித்த்ருக்க முயற்ச்சித்தேன் இருந்த போதும் எனது மனம் அதற்க்கு இடம் கொடுக்கவில்லை இதன் மூலம் நான் கூறவருவது என்ன வென்றால் face book என்றவுடன் note book ஐ கூட மறக்கும் சிறுவர்களுக்கு மத்தியில் இது ஒரு அச்சாணிதான்.

No comments:

Post a Comment