பிரியாவிடை

  • 3

பிரிவென்று சொல்லி 
விடைபெறவில்லை 
தொடரட்டும் பயணமென 

வாழ்த்தி நிக்கிறேன் ......விடியலற்ற நாட்களை 
உன்னதமாய் பட்டியலிட்டு 
விடியலையே சபிக்க 
விரும்பாமல்

விலகுகிறீர் எம்மை விட்டு ...............

உறவுகளே! 
கண்ணீரில் கசங்கும்போது 
எந்நீர் செந்நீரானது 
என் இதய கடிகாரம் 
முட்களை முட்களால் நகர்த்தியது.........

மனம்! 
ஓர் மந்திரச்சாவி 
தந்திரங்கள் பலசெய்து 
சோகத்தையே சுகமாக்கியது..............
வாழ்க்கை பயணமாக்கியது. 

உம் இதயங்களை 
முள்ளான வேதனைகளில் 
முடக்க வேண்டாம் என 
முற்றுபுள்ளி 
செய்துகொண்டு 

தொடரட்டும் பயணமென 

வாழ்த்தி நிக்கிறேன் ............

                                                    அன்புடன் என்றும்(ms)
                            

3 comments: