ஒரு நாள் நியத்தில் நடந்த உண்மை.............

  • 1

               
                                     சுமார் 08.௦௦30 மணியளவில் தனியே ஒரு பயணம் கந்தரோடையிலிருந்து வீடு நோக்கி கண்ட காட்சிகள் ஏராளம் கேட்ட வாக்கியங்களும் ஏராளம்
தனியே எனது வகுப்பை முடித்துக்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருக்கையில் வரும் வழியில் ஒரு மது தவறணை அதையும் தாண்டி வந்தால் ஒரு சுடலை இவ்வாறு தனியே அச்சத்தின் மத்தியில் ஒரு பயணம் வீடு வந்து சேர்ந்திட வேண்டும் என்ற அவா பயணம் செல்கையில் மூவரை சந்திப்பு இருட்டிய நேரம் முனுமுனுகல் எனது காதில் கேட்டது,விரைவு எனது சைக்கிள் மீண்டும் கேட்பு ஓடியது எனது சைக்கிள்.கிரிஸ் மனிதன் என்ற அச்சம் 
    என்ன இதனை எல்லாம் வைத்துபார்க்கும் பொழுது என்ன ஒரு பேக்கதை சொல்ல போறேன் என்று எண்ணுகிறீர்களா இல்லை கிட்ட வந்து பார்த்தால் மூன்று வெறிகாரர்கள் நடு வீதியில் நல்லுறக்கம் அங்கே பத்து நபர்கள் வேடிக்கை இவ்வாறு ஒரு காட்சி அவர்களை சிலநபர்கள் எழுப்பி விட்டனர் அதில் மூவரினது வாயில் இருந்தும் மந்திரங்கள் பொழிந்தன (கேட்க என்ன ஒரு ஆனந்தம் ) அவர்கள் நான் வரும் பாதையில் தான் வந்தனர் முந்தவும் முடிய வில்லை முந்தினாலும் இன்பம் தரும் மந்திரங்கள் இவ்வாறு ஒரு பயணம் 
         அவர்களை தொடர்ந்து சில நபர்கள் வேடிக்கை பார்க்க நானும் அதில் ஒருவன் (வீட்டை நோக்கி) அதி ஒருவர் சிவாஜி பாட்டு வேற நடக்கவே முடியவில்லையாம் அதில் பாட்டுகள் (ஒருத்தனுக்கு ஒரு பொண்டாட்டி வைத்திருக்கவே வழியில்லையாம் அதில ஒன்பது பொண்டாட்டி கேட்குதாம் )என்ற நினைப்பு எனக்கு (அவர்களை பற்றி) 
அதிலே ஒரு சிந்தனை! யாழ்ப்பாணத்தின் கலாச்சாரம் எங்கே போகுது?  அதிலும் ஒரு சந்தோசம் யாழ்ப்பாணத்தின் பொருளாதாரம் பனையில் அத்துடன் பனம்கோலாவிலும் என்று சிந்தனைகள் பலவிதம் அதிலே அது ஒருவிதம்.
வீதிகளின் இருபுறமும் சைக்கிள் ஓட்டம் நானும் அவ்வாறே இவ்வாறு ஒரு மாதிரியாக வீடு வந்து சேர்ந்தேன் அதனை ஒரு இடுகையாக இட வேண்டும் என்ற ஒரு ஆசையால் இதனை இங்கு தந்துள்ளேன் அத்துடன் அந்த நாளை நினைவு கூறுவதற்காகவும் இந்த இடுகையை தந்துள்ளேன் இவ்வாறு தந்தமை சிரிப்புக்காக இல்லை யாழ்ப்பாணத்தினுடைய கலாச்சாரத்தினுடைய போக்கை பற்றித்தான் இதனால் இரவு எட்டு மணிக்கு பிறகு குடிப்பதால் என்ன பயன் அதனால் அதற்க்கு முதல் குடியுங்கள் (அப்ப தானே இன்னும் நூறு பேர் பார்ப்பினம் நீங்கள் உலகம் முழுவதும் பிரபல்யம் ஆவீர்கள்) என்னும் நூறு பேர் உங்களை பார்த்து குடிப்பார்கள்

1 comment: