இங்கிலாந்தில் இந்தியா+நண்பர்களுக்கு மத்தியில் நான்

  • 0

அனைத்து போட்டிகளும் முடிவுறும் வேளையில் உங்களை ஒரு இடுகையில் சந்திப்பதில் மகிழ்ச்சி அளிக்கிறது அந்த வகையில் எனது கணனியில் ஏற்ப்பட்ட பிழைகளை எல்லாம் திருத்தி முடித்து விட்டு ஒரு புதிய பதிவை எனது இந்தியாவுக்கும் இந்திய ரசிகர்களுக்கும் இடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன் அந்த வகையில் இந்தியா அணி இங்கிலாந்து மண்ணில் படும் தோல்விகளை சிறு அலசல் போட்டிருக்கின்றேன் (வெட்டியாய் வீட்டில் இருந்த நாட்களில்)


              
                              இந்தியா அணியை பொறுத்த வரையில் அனைத்து தொடர்களிலும் தோல்விகளை சந்தித்து வருகின்றது அந்தவகையில் இங்கிலாந்து மண்ணில் வைத்து தனது டெஸ்ட் போட்டிகளிலும் 20 -20 போட்டிகளிலும் அத்துடன் நடை பெற்றுக்கொண்டிருக்கின்ற ஒருநாள் தொடரிலும் தோல்வியை சந்தித்துள்ளது நடப்பு சாம்பியனான இந்தியா இவ்வாறு ஒரு தோல்வியை அடைந்து உள்ளது (வெளில தலை காட்ட முடியாது) அத்துடன் என்னை காணும் நண்பர்கள் எல்லாம் என்னடா இந்தியா?(என்ற நக்கல்) நானும் எத்தினை நாளைக்கு உலக கோப்பையை வைத்து தப்பித்து கொள்வது (முடியுமானளவு தப்பித்து கொண்டிருக்கின்றேன்)

                                  இவ்வாறு இடைஞ்சலுக்கு மத்தியில் நானும் இந்தியாவும் அத்துடன் நண்பர்களுக்கு மத்தியில் நான் அத்துடன் இந்தியாவின் பெருமைகளை கதைக்காத நண்பர்கள் கூட ஒரு நக்கல் பார்வையில் நடை நடக்கின்றனர் பொறுக்க முடியலே...........................**************************************

 டெஸ்ட் போட்டிகளை பற்றி போன இடுகையில் எனது கருத்துக்களை நான் தெருவித்திருந்தேன் அத்துடன் அதில் இடாத சில குறிப்புக்களையும் அத்துடன் ஒருநாள் போட்டி பற்றிய சில குறிப்புக்களையும் இட்டுள்ளேன் 
டெஸ்ட் :

                   
                                       ஆடிப்போன இந்தியர்களை அதிரவைக்கும் அரங்கில் களமிறங்கிய இந்தியா அணி ஆரம்பம் முதல் தனது தவறுகளாலும் வீரர்களின் இடை விலகளாலும் அடக்கி வாசிக்க வேண்டி நிலை ஏற்ப்பட்டது அத்துடன் சிறந்த துடுப்பாட்ட வீரர்கள் இந்திய அணியில் இருந்தும் இங்கிலாந்து பந்து வீச்சுக்களை சமாளிக்க முடியாமல் தவித்துவந்தது அதிலும் டிராவிட் சிறப்பாக செயற்பட்டு வந்தார் அத்துடன் பிரவீன் குமார் சொல்லும் படியாக இல்லாவிட்டாலும் சிறப்பாக பந்து வீசியிருந்தார் அத்துடன் கடந்த வருடம் தனது இரண்டாம் இன்னிங்க்ஸ் துடுப்பாட்டத்தால் பல வெற்றிகளை குவித்த் லச்மன் இந்தியாவின் ஒரு இன்னிங்க்ஸ் தோல்வியை கூட தவிர்க்க முடியாமல் போனது அதிலும் சச்சின் ஒரு சதம் கூட அடிக்காமல் போனது கவலை அளிக்கின்றது 
அதிலும் சகீர்கான் இல்லாத இந்தியா அணியா நினைத்து கூட பார்க்க முடியவில்லை இருப்பதே ஒரேஒரு அனுபவ பந்து வீச்சாளர் நான் கடந்த குறிப்பில் இந்தியா அணியின் டெஸ்ட் போட்டி பற்றி கூறியிருந்ததால் இங்கு பெரிதாக கூறவில்லை 

ஒருநாள் போட்டி ;
                     அமர்க்களமாக தொடங்கிய இந்த தொடர் ஆசையுடன் காத்திருந்தேன் இந்தியாவின் மேல் ஒரு கண்ணை அதிலும் குறிப்பாக மழையின் விளையாட்டோ அபூர்வமாக இருந்தது (இவ்வாறு யார் விளையாடியதையும் பார்த்ததில்லை) நான் அதிலே பார்த்தது மழை தான் கூட முதல் போட்டியில் சிறப்பாக ஆடிய இந்தியா அணியை அடக்கியது அபூர்வ மழை இந்தியா அணியை பொறுத்த வரையில் இந்தியாவில் மிக சிறந்த துடுப்பாட்ட பலத்துடன் காணப்படுகின்றது இதனையும் அதில் பெற்ற தோல்வியையும் வைத்து இந்தியா அணி எதிலாவது வெற்றி பெற்று விடும் என்பது எல்லோரது கருத்தாக இருந்தது

                    

                            இந்தியா அணியில் ஒரு ஆரம்ப இளம் வீரராக சோபித்துவருகின்றார் ரஹென அத்துடன் அவரது துடுப்பாட்டத்தை பார்க்கும் பொழுது சேவாக் தேவையோ என்ற  சிந்தனை அற்ப்புதமான ஆட்டங்களை வெளிப்படுத்தி இருக்கின்றான் இந்த ஒருநாள் தொடரில் அத்துடன் டெஸ்ட் போட்டிகளில் கலக்கிய டிராவிட் ஒருநாள் போட்டிகளின் சொதப்பி வருகின்றார் அத்துடன் இளம் வீரரான கொஹ்லி யும் கூட அந்தவகையில் ரெய்னா,டோனியும் தமது பொறுப்புக்களை உணர்ந்து தமது கடைமைகை செய்து வருகின்றனர் அத்துடன் பார்த்திவ் படேல் ஒரு சில போட்டிகளில் தனது திறமைகளை வெளிக்கொணர்ந்து இருக்கின்றார் இந்த தொடர் முழுவதும் இந்தியா அணியினர் எட்டு பேர் இடைவிலகினர் என இந்தியாவின் அணித்தலைவர் கூறியிருப்பது,இந்தியா அணியில் முக்கிய வீரர்கள் இல்லாதது தோல்விக்கு காரணமாக இருக்குமென நான் கருதுகின்றேன் மீண்டும் தொடர்கள் முழுவது முடிவடைந்த பின்பு உங்களை ஒரு புதிய இடுகையில் சந்திக்கின்றேன்

No comments:

Post a Comment