எங்கிருந்து வருகிறார்கள்!................

  • 0

              சிலர் ஆக்குவதற்காக சிலர் அழிப்பதற்காக பிறக்கின்றார்கள் என்னும் சிலர் கூட இருந்து குழி பறிப்பதற்காக பிறக்கிறார்கள் ஒரு சிலர் உதவி செய்வதற்காக வந்து உபத்திரம் செய்கின்றார்கள் அந்தவகையில் இந்த பூமியில் எத்தனை வித மனிதர்கள் அவர்களின் எத்தனை வித சிந்தனைகள் என்றிருக்க கூடப்பிறந்த பழக்கவழக்கங்கள் கூட
    
         இன்றைக்கு எனது கணணியை சந்தோசத்துடன் open செய்து சில நிமிடம் முகப்புத்தகம் அத்துடன் நண்பர்களுடன் அரட்டை அடித்து விட்டு மின்னஞ்சலை சரி பார்த்து பின்பு ஒரு சிறு தூக்கம் இன்றைக்கு வேற எமது கிராமத்தில் பெரு மழை அத்துடன் ஒரு வழியாக நண்பன் வீட்டை சென்று பின்பு எனது நண்பர்களுடன் மழை என்ற காரணத்தால் வெட்டி பேச்சு சில மணித்தியாலங்கள் இவ்வாறு இளமையை ஒரு அனுபவிப்பு (வாலிப வயது ; அனுபவி ராஜ அனுபவி).முடித்துவிட்டு வீட்டுக்கு சென்று தனியார் வகுப்புக்கள் இல்லாத காரணத்தால் மீண்டும் எனது கணணியை open செய்தேன் (என்ன ஒரு அதிசயம்,இது தான் ஒவ்வொரு நாளும் நடை பெறுவது).


           
                           நான் இன்றும் வழமையாக செய்வது போல சென்று கணணி விளையாட்டுக்கள் அதை முடித்துவிட்டு எனது வன்தட்டில் உள்ள பாகம் (க,த,க,ப) open செய்தேன் திடீரென எனது கண்ணில் பட்டது ஒரு குறும் தகவல் அதை அரை குறை ஆங்கிலத்தில் வாசித்தேன் அப்பொழுது அதில் இருந்தது நான் கணனியில் நச்சுநிரல்களுக்காக இடப்பட்ட்ருந்த anti -வைரஸ் எனது கோப்புக்களை எல்லாம் அழித்து விட்டது 


திகைத்தேன் வெறுமையாக காணப்பட்டது எனது கணணி (பயிரை வேலி மேஞ்சது போல) என்னுடைய கோப்புக்களை தின்றுவிட்டது நான் எனது கணணியை shutdown செய்து விட்டு எனது நண்பன் வீட்டில் இருந்து இந்த இடுகையை எழுதி இருந்தேன் நான் முடிவாக என்ன கூற விரும்புகின்றேன் என்றால் இந்த anti -virus மாதிரியே எமது உலகத்தில் எத்தனை மனிதர்கள் தங்களை நம்பி வந்தவர்களை கழுத்தறுக்கிறார்கள் நான் முதல் கூறியது போல மனிதர்களது சிந்தனைகள் சில நன்மைக்கும் சில தீமைக்கும் பயன்படுகின்றன.

  
குறிப்பு; கணணியை நம்பியோர் கை விடபடுவார் இது எனது வாழ்க்கை தத்துவம் (அடியேன் pc antivirus காக்க)
                மேலும் ஒன்று எனது கணணியை திருத்திய பின்பு மீண்டும் ஒரு இடுகையில் சந்திக்கின்றேன் என்றும் ms

No comments:

Post a Comment