துர்க்கையம்மன் மகோற்சவம்

  • 0

                         29 /08 /2011 அன்று கொடிஏற்றத்துடன் ஆரம்பித்து இன்று ரதோற்சவம் நடைபெற்றது (08 /09 /2011) இந்தவகையில் எமக்கு எல்லாம் இன்று ஒரு சந்தோசமான நாள் இன்றைக்கு கண்ணை குத்தும் அழகில் பல சாமிகள் உலாவரும் நான் கூறியது பல பெண்களின் ஊர்வலம் 

           கண் விழிக்கும் போதே கடவுள் நினைவோடெழுந்து தத்தம் கடமைகளைத் தொடங்குவது நாளாந்த நிகழ்வாகும்.  அயர்ந்து தூங்கியோர் விரைந்து எழுந்ததும் அம்மன் ஆலயமணி கேட்டதா என்றே முதலில் வினவுவர். தினமும் நிகழும் மூன்று நேரப் பூசைகளுக்கும் செல்லும் பக்தர்கள் பலர் இருந்தனர்.வருடாந்த மகோற்சவ காலங்களில் ஊரே திரண்டுவிடும்.வைகாசித் திருநாளில் பிள்ளையார் ஆலயத்திலும் மார்கழித்திருவாதிரை நாளில் அம்பாள் ஆலயத்திலும் மகோற்சவம் இறைவெய்தும்.  அம்பாள் ஆலய மகோற்சவ காலத்தில் நாட்டின் எலாப் பகுதிகளிலிருந்தும் எமது மக்கள் தவறாது வந்து கூடுவர். சித்திரத் தேரில் அம்மன் பவனிவரும் திருக்கோலக் காட்சியைக் கண்டுகளிக்கும் திருநாளில் பலநூறு மக்கள் தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றும் காட்சி பக்தி பூர்வமாக இருக்கும்.துர்க்கையம்மன் ஆலயம் கடந்த நூற்றாண்டு ஆரம்பத்தின் முன் பின்னாக எமது ஆலயமும் எப்பிடி இருந்து வந்து இன்று 2011ஆம் ஆண்டு தனது மகோற்சவத்தை வெகு விமர்சையாக கொண்டாடி முடித்துள்ளது இதன் போது வெளி நாட்டில் இருந்து கூட மக்கள் வந்து இதனை பார்த்து தமது நேர்த்திகளை முடித்துகொண்டனர் இவ் ஆலயத்தின் தேர் திருவிழா மற்றும் சப்பறம் என்பன சிறப்பாக முடிவடைந்துள்ளது இந்த ஆலயத்தில் நடை பெற்ற உற்சவங்களை பற்றி அலசுவோம்.கொடி ஏற்றம் என ஆரம்பித்து நடுவிலே வியக்கவைக்கும் திருவிழாக்களுடன் நடை பெற்று வருகின்றது.அந்த வகையில் இன்று தனது தேர் திருவிழாவை கொண்டாடிமுடித்துள்ளது 
      
சென்றமுறை திருவிழாவின் போது என்னால் எனது நண்பர்களுடன் அதனை காண முடியாமல் போனது எனக்கு மிகவும் கவலை அளிக்கின்றது சென்ற முறை நான் ஒரு பாடசாலையில் மாணவனாக இருந்தபோது எனக்கு அன்றைய தினத்தில் ஏற்ப்பட்ட ஒரு துடுப்பாட்ட போட்டிகாரணமாக நான் அங்கு சென்று நண்பர்களுடன் அனுபவிக்க முடியாமல் போனது கவலை அளிக்கிறது (நான் எனது வாழ்வில் பாதியை இழந்து விட்டேன் )

அதற்க்கு முதல்முறையும்என்னால் அங்கு சென்று தேர் திருவிழாவை காணமுடியாமல் போனது அதற்க்கான காரணம் நான் கூற விரும்பவில்லை ஆனாலும் அதற்க்கு நான் மனம் வருந்தவில்லை ஏன் எனில் நான் மற்றைய திருவிழாவிற்கு சென்று இருந்தேன் எனது சோகக்கதை நான் கூறவில்லை இவ்வாறு பலதடவை சந்தர்ப்பம் கிடைத்தும் நான் அதனை பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை (கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை). இந்த முறையும் என்னால் போக முடிய வில்லை என்னுடைய தலை எழுத்து சரியாக இல்லை 

No comments:

Post a Comment