ஆசிரியர் தினம்+சிறப்பு நிகழ்ச்சி(cricket)

  • 0

இன்று 03 /10 /2011  எமது பாடசாலையில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியில் எமது ஆசிரியர்கள் வெற்றி பெற்றார்கள் அத்துடன் அந்த போட்டி பற்றி சிறு அலசல் போடலாம் என நான் நினைக்கிறேன்.அந்த வகையில் நேற்று காந்தி ஜெயந்தியை முடித்துக்கொண்டு புதிய இடுகையில் உங்களை சந்திப்பதிலும் புதிய ஒரு மாதத்திலும் உங்களை சந்திக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.


இன்று திங்கட்கிழமை நடைபெற்ற துடுப்பாட்ட போட்டியில் ஆசிரியர்களை எதிர்த்து எமது கல்லூரி மாணவர்கள் மோதினர் இதில் எமது ஆசிரியர்கள் வெற்றி பெற்று கொண்டனர் அந்த வகையில் எனது சார்பாக ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்களை தெருவித்துகொள்கிறேன் எமது ஆசிரியர்களில் சச்சின் னும் இல்லை முரளிதரனும் இல்லை அவ்வாறு இருந்த போதும் இளமை மிகு மாணவர்களை இலகுவில் வெற்றி கொண்டனர் இருந்த போதும் என்னால் இதனை முழுமையாக கண்டுகளிக்க முடிய வில்லை அந்தவகையில் மனம் வருந்துகிறேன்முதலில் துடுப்பெடுத்தாடிய எமது கல்லூரி ஆசிரியர்கள் சிறப்பான துடுப்பாட்டத்தால் சுமார் பத்து பந்து பரிமாற்றத்தின் போது நூறு ஓட்டங்களை குவித்திருந்தனர் (இது சுமாரான ஓட்டம் ) எமது மாணவர்கள் பாவம் இல்லையா? என்ன ஒரு அடி அதிலும் ஒருவனின் பந்தில் மூன்று இமையமலை ஆறு ஓட்டங்கள் (6,6,6) அத்துடன் முடித்தார் அந்த மாணவன் பந்து வீசுவதை (வாழ்க்கையில் கூட நினைத்து பார்க்க மாட்டார்)

அத்துடன் ஒரு மாதிரியாக தப்பி பிழைத்தனர் எமது மாணவர்கள் (ஐயோ காணும் காணும்)

அதனைதொடர்ந்து துடுப்பெடுத்தாடிய எமது மாணவர்கள் வந்த வேகத்திலேயே பவிலியன் அனுப்பப்பட்டு கொண்டிருந்தனர் ஒருமாதிரியாக சூரிய கிரகணம் வருவது போல இடைக்கிடையில் ஒரு ஆறு ஓட்டங்கள் பெறப்பட்டது (சும்மா இப்படியாவது அடித்தால் தான் எங்களை நம்புவார்கள் என்ற நினைப்பு மாணவர்களுக்கு) சில வீரர்கள் ஓட்டம் எதையும் ப்ராத நிலையில் வெளியேற்றப்பட்டனர் (மட்டையை நினைத்து கூட பார்க்க மாட்டார்கள் எமது வீரர்கள்)ஒரு மாதிரியாக முடிவுக்கு வந்தது அந்த போட்டி அத்துடன் என்னும் ஒன்று என்னால் அங்கு நடைபெற்ற போட்டியின் பொது புகைப்படங்கள் பெற முடியாத காரணத்தால் (கருவிகள் ஒன்றும் யாவரிடமு  இல்லை பாடசாலையாகையால்)  நான் இங்கு தரவில்லை இங்கு தந்திருப்பையை எல்லாம் இணையத்தில் இருந்து பெறப்பட்டவையாகும் (படங்கள்)

இந்த முறையும் ஆசிரியர் தினம் சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துக்களை தெருவித்துக்கொள்கிறேன்

No comments:

Post a Comment