முகப்புத்தகத்தில் கலாட்டா

  • 1

சிறப்பாக ஆரம்பித்த இந்நாளில் ஒரு இடுகையும் இன்றி தவித்துவந்த நேரம் எனக்கு தோன்றியது தான் இந்த காமெடி அத்துடன் அதற்க்கு உதவிய எனது நண்பன் ஆதவன் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்களை மட்டும் அல்ல எனது நன்றிகளையும் தெருவித்துக்கொள்கிறேன் இந்த படங்களை பாருங்களேன் இதில் நான் போன இடுகையை வாசித்தேனது நண்பர்கள் யோசித்து அதன் படியே நான் பிரபல்யம் அடைய எனக்கு ஒரு நல்ல வழி காட்டித்தந்துள்ளனர் அந்தவகையில் மீண்டும் ஆதவன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெருவித்துக்கொள்கிறேன் 




இந்த படங்களின் மூலம் உலகில் உள்ள பணக்காரர்கலூடு எனக்கு தொடர்பு இருப்பதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன் அதனையும் நீங்களும் பார்த்து கொள்ளுங்கள்



































                           வாட என் பில்கேட்ஸ் (ஆதவன் ) நண்பேண்டா

பிரபல்யமா?......

  • 3
           பிரபல்யமா அது எனக்கு எனவேன்றே தெரியாது அவ்வாறு இருந்த போதும் அதனுள் எனக்கு மிகவும் இஷ்டம் அதனாலே தான் நான் இந்த பதிவர் பட்டியலில் இணைந்தேன் அத்துடன் டுவிட்டர் உலகினிலும் இணைந்தேன் அவ்வாறு இருந்த போதும் போதியளவு வரவேற்ப்பு கிடைக்க வில்லை எனக்கு பின்பு ப்ளாக் திறந்தவர்கள் எல்லோரும் தங்களின் அங்கத்தவர்களை அதிகரித்து கொண்டுள்ளனர் ஆனால் என்னால் அதனை நிறைவு செய்ய முடியவில்லை இதனுடைய காரணம் தெரிந்தவர்கள் தயவு செய்து இதனுடைய காரணங்களை கூறுங்கள் 

அத்துடன் எனக்கும் அந்த காரணத்தை தெரிந்தால் நான் இந்த காரணத்தை திருத்திக்கொள்ள முடியும் எனவே அந்த ரகசியங்களை கூறுங்கள் 




நான் நேற்று தீபாவளியை முடித்துக்கொண்டு நண்பர்களுடன் இருந்த போது அதில் ஒருவன் கூறியது என்னவென்றால் மோசி நீயும் ப்ளாக் வைத்திருக்கிறாய் அல்லவா அதனால் என்ன பிரபல்யம் அடைந்து விடுவியா என கிண்டல் செய்தார்கள் மணந தளராத வேதாளம் முருங்கை மரம் ஏறியது போல அந்த அவமானத்துடன் இந்த இடுகையை இடுகின்றேன் ஏன் என்றால் உங்களின் மீதுள்ள ஒரு நம்பிக்கையால் அதனை தயவு செய்து நிறைவேற்றுங்கள் அத்துடன் இந்த இடுகையின் பின்பு உங்களின் ஆசைகளை தெருவியுங்கள் 



என்னமாதிரி பதிவுகள் எழுத்தினால் உங்களுக்கு பிடிக்கு என்பது எனக்கு தெரியாது சினிமா ,நகைச்சுவை,காதல் ,கவிதைகள் ,வேறு ........ 






ஆனால் இந்த தளம் எனது வாழ்க்கையில் நடைபெற்ற சில நிகழ்வுகளை கூறுவதற்காகவும் இருந்துள்ளது என்னால் இதனையொரு பொழுதுபோக்கு சாதனமாக கருத முடியாது ஏனெனில் இதனில் சில சுவாரசியமான் விடயங்களும் உள்ளன அத்துடன் எனது மூஞ்சிப்புத்தகத்தை (facebook)பொறுத்தவரையில் அதில் சில விளையாட்டுக்களை விளையாடி பொழுதுகளை போக்கிக்கொண்டு இருக்கிறேன் அத்துடன் டுவிட்டர்இல் சில நேரம் எனது நடத்தைகளை தெருவித்துக்கொண்டிருக்கிறேன் எவ்வாறு இருந்த போதும் அதனுடைய பலனை நான் காண முடிய வில்லை ஏனெனில் அங்கு எனக்கு போதிய வரவேற்ப்பு கிடைக்கவில்லை (தொடர்பவர்களின் எண்ணிக்கை கூடவே இல்லை) 


அத்துடன் என்னக்கு ஒரு சில நண்பர்கள் கூறியிருப்பது என்ன வென்றால் மோசி நீ என்னும் 100 இடுகைகளை கூட இடவில்லை அதனால் தான் இப்படி என்னும் நூறு இடுகைகளை இடுவதால் உன்னுடைய கனவு நடைபெற்று விடும் என்று இப்படியான கருத்துக்களை நான் ஏற்றுக்கொள்கிறேன் அதிலும் சில நண்பர்கள் எனக்கு என்ன கூறியிருந்தார்கள் என்ன வென்றால் நீ பல திரட்டிகளை பயன்படுத்து என்று அதனாலும் உன்னுடைய கனவு நடைபெறும் என்று 


நான் எனது நண்பர்களுடன் இதை பற்றி பேசினால் அதில் சிலர் நீ இப்ப தானே உயர் தரம் கல்வி கற்றுக்கொண்டிருக்கிறாய் எனவே பிறகும் உனக்கு காலம் இருக்குது என்று அதனால் நான் மன மகிழ்ச்சி அடைகிறேன் அத்துடன் இந்த இடுகையை வைத்து நான் பதிவில் இருந்து விலகப்போவதாக நினைக்காதிர் இன்னும் எனது பனி தொடரும்............




இந்த பதிவை பார்த்தாவது என்னுடன் இணையுங்கள் உங்கள் கருத்துக்களை பரிமாறுங்கள் அத்துடன் தவறாமல் வாக்களித்துவிட்டு செல்லுங்கள் என்னும் ஒரு புதிய இடுகையில் சந்திக்கும் வரை விடைபெற்று செல்கிறேன்

                                                                  நன்றி...........

தீபாவளி+வெடி

  • 2

தீபாவளி திருநாளில் புத்தாடை அணிந்து, தீபங்கள் ஏற்றி இனிப்பு பலகாரங்கள் உண்டு, மகிழ்ச்சியோடு இந்த தீபாவளியை கொண்டாடுங்கள் இன்பம் பொங்கும் தீபாவளி தீபம் என்றால் ஒளிவிளக்கு, ஆவளி என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி கொண்டாடுதல் என பொருள் படும் எனவே இன்று போல் என்றும் உங்களது உள்ளங்கள் ஒழி பொருந்தியவை யாக காணப்பட இறைவனை பிரார்த்திக்கின்றேன் தீபாவளி மருந்து செய்யும் முறை தீபாவளி என்றாலே வீட்டுக்கு வீடு விருந்துதான். அன்று ஒரு நாள் எல்லா வீடுகளிலும் பலகாரங்கள் இல்லையோ ஆனான் இன்று எல்லோரது வீடுகளிலும் பலகாரங்கள் கட்டாயம் இருக்கும் 


நாம் புனிதமாவதற்குத்தான் வெடி வெடிக்கிறோம். அதாவது சில பொருட்களை அழிப்பதற்கு அதனை கொளுத்துகிறோம் அல்லவா அதுபோன்றுதான் நமது மனதில் இருந்த தீய எண்ணங்களை வெடி வெடிப்பது போல் சிதறடித்துவிட வேண்டும் என்பதற்காக வெடி வெடிக்கிறோம்.தீபாவளி என்றாலே இனிமைதான். குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள், குமரிகள், பெரியோர் எல்லோரும் மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் இருக்கும் உன்னத நாளை தீபாவளிப் பண்டிகை தருகிறது! சிறுவர்களுக்கு இணையாக யாராலும் அந்நாளை அவ்வளவு இனிமையுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாட முடியாது. தீபாவளி வருகிறது என்றாலே அவர்களுக்கு உற்சாகம்தான்!


தீபாவளிக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, இந்த ஆண்டு தீபாவளி கழிந்து திருமணம் நடைபெறவிருக்கும் புது மணமக்கள் அடுத்த ஆண்டு தங்களது தலை தீபாவளியை எண்ணி, பூரித்து ஒருவருக்கொருவர் பரிசுகளை பரிமாறிக கொள்வது ஒரு வகையான ரகம்.அமைதியான வாழ்விற்கு நம்மை நிரந்தரமாக அழைத்துச் செல்லும்.அதற்கு வித்தாக தீபாவளியை நினைப்போம்! கொண்டாடுவோம்!
அன்பான உள்ளங்களே என்னை தொடர்பவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பதில் உதவியாக இருங்கள் தவறாமல் வாக்களியுங்கள்
          மோசிகீரனின் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

gather page (பயன் உள்ள இணையத்தளம்)

  • 5

இன்று யாழ்ப்பாணத்தில் அதிகம் மாணவர்களால் பேசப்படும் ஒரு தளமாக மாறியுள்ளது www.gatherpage.com இந்தவகையில் இதனால் யாழ்பாணத்தில் உள்ள பிள்ளைகள் மட்டும் அல்ல இலங்கையில் உள்ள பிள்ளைகளும் நன்மை அடைகின்றனர் ஒரு கல்விசார் தளமாக மாறியுள்ளது அந்தவகையில் இதனை ஒழுங்காக பயன்படுத்துவது மாணவர்களது கடமையாகும். 



யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து பிள்ளைகளுக்கும் இது ஒரு பயன் உள்ள தளமாக மாறியுள்ளது அந்தவையில் இதனுடைய நிறுவுனர் குறிப்பிட்டுள்ள ஒரு முக்கிய விடயம் என்ன வென்றால் இதனுடைய நோக்கம் யுத்தத்தால் பாத்திக்கப்ப்பட்ட பிள்ளைகளுடைய கல்வி நடவெடிக்கைகளை மேம்படுத்த இவ்தளமானது உருவாக்கப்பட்டது என கூறியுள்ளார் (நல்ல விடயம் ஒன்று)


அத்துடன் இந்த தளத்தில் மத்திய நிலையம் யாழ்ப்பாணத்தில் கொக்குவிலில் உள்ளது என நான் நினைக்கின்றேன் அந்தவையில் இதன் மூலம் மாணவர்களது கல்வி நடவடிக்கை மேலோங்கும் என்பதில் எவ்வித சந்தேகமே இல்லை இதில் கணக்குகளை உருவாக்கி அத்துடன் இதில் கடந்தகால வினாக்கள்,மாதிரி வினாத்தாள்கள்,பிரபல்ய பாடசாளைகளினுடைய பரீட்சை பேப்பர் போன்றவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் அத்துடன் இதன் மூலம் அவர்களது குறிப்புக்கள் உலக விடயங்கள் என்பவற்றையும் பார்த்துக்கொள்ள முடியும்.

இதனுடைய நன்மை ஒன்று ஆன்லைன்யில் பரீட்சைகளை செய்துகொள்ள முடியும் அதன்மூலமும் மாணவர்களுடைய அறிவு வளர்வது மட்டுமல்ல  அவர்களது தொழில் நுட்ப அறிவும் வளரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை இதனால் பலருடைய வார்த்தைகளிலும் அதிகம் பேசப்படும் தளமாக மாறியுள்ளது இந்த இணையத்தளம்.


            இதனை பயன் படுத்தி அதிக நன்மைகளை பெறுங்கள் மாணவர்களே!

மறுபடியுமா?

  • 0
                  யானைக்கு ஒருகாலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும் என்று கூறுவார்கள் அந்த முது மொழி தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது போல தோன்றுகின்றது அது என்னவென்றால் இந்தியா இங்கிலாந்து போட்டியாகும் அந்த வகையில் முதலாவது போட்டியில் இந்தியா அணி வெற்றி பெற்றுள்ளது இதற்க்கு முன்னர் இங்கிலாந்து சென்று விளையாடிய இந்தியா அணி சகல போட்டிகளிலும் தோல்விகளை சந்தித்தது எல்லோருக்கும் தெரிந்த விடயம் அந்த வகையில் இந்த மாதம் இந்தியா சென்றுள்ள இங்கிலாந்து அணியை இந்தியா தனது சொந்த மண்ணில் வைத்து வெல்லும் என்பதுதான் கேள்விக்குறி அனாலும் இந்தியா அணியை பொருத்தவரையிலும் இந்தியா ஆடுகளங்களை பொருத்தவரையிலும் சுழல் பந்து வீச்சுக்கே சாதகமாக உள்ளது. அதனாலே இந்தியா அணி வெற்றிபெறும் என்று எல்லோரது கருத்தும் அதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.



இந்தியா அணியில் அடுத்தடுத்து வீரர்களுக்கு காயங்கள் ஏற்ப்படுவதாலும் வலுவிழந்த நிலையில் காணப்படுகின்றது அதனாலும் இங்கிலாந்து வெற்றி பெறுவதற்கான  சூழ் நிலை காணப்படுகிறது இந்தியா அணியில் டோனி,ரெய்ன, கொஹ்லி போன்றோரது துடுப்பாட்டமும் அஷ்வின்,பிரவீன் குமார் ஆகிடூறது பந்து வீச்சுமே பலமாக உள்ளது.ஆனால் இங்கிலாந்தில் சகல துறைகளிலும் பலம் பொருந்திய அணியாக காணப்படுகின்றது இதனாலேய இங்கிலாந்தின் வெற்றி வாய்ப்பும் உள்ளது என்பது எல்லோரது கருத்தும் அட்ணனை டோனி தலைமையிலான அணி எவ்வாறு வெறி பெரும் என்பதுதான் சுவாரசியமான விடயம்.அதிலும் போன முறை நசிர் ஹுசைன் கூறியது போல கழுதைகள் இந்த முறையாவது சிறப்பாக விளையாடுகிறார்களா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் 




இன்னும் ஒன்று:

         இலங்கை பாகிஸ்தான் அணிகள் மோதும் தொடர் நடைபெற உள்ளது அந்த தொடரிலும் ஒரு முக்கிய விடயம் உள்ளது ஏன் எனில் சென்ற முறை நடை பெற்ற போட்டியில் இல்லங்கை அணி பாகிஸ்தானில் வைத்து சிறப்பாக விளையாடிய பொழுது சில நபர்களின் தாக்குதலால் அந்த திடர் அரைவாசியில் நிறுத்தப்பட்டது 




அன்றில் இருந்து இன்று வரை பாகிஸ்தானில் ஒரு போட்டி கூட நடை பெறவில்லை இந்த தொடரிலும் யார் வெற்றி பெறுவார்கள் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

களைகட்டும் காப்பியங்கள் (தீபாவளி ஸ்பெசல் )

  • 0

தீபங்களை ஏற்றி தீபத்திருநாளை கொண்டாடும் நாள் வந்தா வண்ணம் உள்ளது அந்தவகையில் தமிழர்களாக பிறந்த அனைத்து சைவர்களும் இந்த நாளில் ஏதாவது புதிதாக செய்வது வழக்கம் அவ்வாறே இந்த வருடமும் என்ன ஸ்பெசல் உள்ளது என்பதே எமது கேள்வி அந்தவையில் இந்த முறை விஜெய் மற்றும் சூர்யா நடிப்பில் வருகின்ற படங்கள் வேலாயுதம் மற்றும் ஆம் அறிவு அந்த வகையில் இந்த இரு படங்களிலும் உள்ள ஸ்பெசல் என்ன?(மக்களால் விரும்பப்படுவதன் நோக்கம் என்ன) அதிலும் தனுசின் நடிப்பில் வெளியாகும் மயக்கமென்ன படத்திலும் இவ்விரண்டு படங்களும் பெரிதாக பேசப்படுவதர்க்கான காரணங்கள் என்ன?


 இதிலும் இந்த முறை யாழில் உள்ள திரையரங்குகளில் ஏற்ப்படுத்தும் மாற்றம் என்ன? யாழில் உள்ள திரையரங்குகளில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு படத்தின் கட்அவுட் வைத்து காணப்படுகிறது (ராஜா,மனோகரா,செல்லா,)இவ்வாறான திரையரங்குகளில் அந்தவகையில் அதில் இருக்கும் சுவார்சியங்களை ஆராய்வோம்


ஏழாம்அறிவு படம் அதிகளவு மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படமாக காணப்படுகிறது அதில் இருக்கும் சிறப்புக்களை ஆராய்வோம் 

சூரியா,ஸ்ருதி நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் உதயநிதி தயாரித்த 7 ஆம் அறிவு படம் தீபாவளி அன்று வெளிவர இருக்கிறது..இந்தப் படத்தின் கதை இதுவரை உலக சினிமா ச‌ரித்திரத்திலேயே சொல்லப்படாதது என சூளுரைத்திருக்கிறார் முருகதாஸ்.7ஆம் அறிவுக்கு ஹா‌ரிஸ் ஜெயரா‌ஜ் இசையமைத்துள்ளார். அவ்வாறு பெரிதும் எதிர்பார்ப்பின் மத்தியில் அந்தப்படம் 


அத்துடன் வேலாயுதம் படத்தின் சிறப்புக்களை விட மக்களின் கருத்துக்களை பற்றி ஒரு அலசல்

ஆறு கோடி மக்களின் அதிபதி எங்கள் இளைய தளபதி.வேலாயுதம் வெற்றி பெற வாழ்த்தும் அன்பு நெஞ்சம் ******.தமிழ் மக்களின் காவலன்.வருங்கால தமிழகம் வாழ்க வாழ்க....... அடுத்த சுப்பர் ஸ்டார் இளைய தளபதி

இது மறுபடியும் தலைவர சூப்பர் ஸ்டார்னு நிருபிக்ற படமா அமையும் அப்டின்றதுல சந்தேகமே இல்ல. எப்பவுமே எங்க அண்ணன் தான் டாப் ஐ லவ் மை விஜய் அண்ணா கலக்குங்க... நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும் நம் தளபதி படை தோற்பின் எப்படைவெல்லும்

சூப்பர் மனிதர் அண்ட் விஜயன்ன நிங்கதான் சூப்பர் ஹீரோ உங்க பாடம்தான் ரெப்ப புடிக்கும்


ஒரு ரீமேக் படத்தை திரும்ப 100 நாள் ஓட வைப்பது உன்னால் மட்டும்முடியும். ஆல் தா பெஸ்ட் விஜய்

எப்படி படம் இருந்தாலும் தளபதி தளபதிதான்.விஜய் அண்ணா நீங்க என்ட உயிர் நாங்க எல்லாம் இருக்கும் மட்டும் உங்கள ஒருவரும் அசைக்க முடியாது

சூப்பர் விஜய் நீங்கள். இந்த படத்தின் ரீமேக் சூப்பர் ஆகா இருந்ததை விட இந்த படம் சூப்பராக இருக்கும் . என்னுடையவாழ்துக்கள்.

இவ்வாறு பலதரப்பட்ட கருத்துக்களை பார்த்தோம் அத்துடன் தீபாவளி வாழ்த்துக்களை அனைத்து உள்ளங்களுக்கும் தெருவித்து கொள்கிறேன்.இன்னுமொரு தீபாவளி இடுகையில் உங்களை சந்திக்கேறேன்.

ஆயுத பூஜை

  • 0

ஆயுத பூஜையாம் - ஆயுதங்கள் மனிதனின் அறிவு வளர்ச்சிக்கேற்ப ஒவ்வொரு காலகட்டத் திலும் மாற்றம் பெறும். அவை மனிதனின் கருவிகள்தான் - அவற்றிற்குப் பூஜை போடவேண்டுமா?


அப்படிப் பார்த்தால் வீட்டைச் சுத்தம் செய்யப்படும் மிக முக்கியமான கருவி விளக்குமாறுதான் - அதற்குப் பூஜை உண்டா? நகர சுத்தித் தொழிலாளி எந்தக் கருவிகளுக்குப் பூஜை போடுவார்?



இப்படி எல்லாம் இருக்க இந்த ஒன்பது நாளும் மதம் மதம் என்று இப்படி ஒரு கலகலப்பான காலத்தில் நாளையுடன் முடிவடைவதை இட்டு கவலை அடைகிறேன் காலத்தின் கோலம் என்ன செய்யும் பூயை புத்தியை கொடுக்காது தூக்க மாத்திரையாத்தான் கொடுக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம் அல்லவா?
எனது பூசை இந்த முறை சுட்டிக்குத்தான்


ஆசிரியர் தினம்+சிறப்பு நிகழ்ச்சி(cricket)

  • 0

இன்று 03 /10 /2011  எமது பாடசாலையில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியில் எமது ஆசிரியர்கள் வெற்றி பெற்றார்கள் அத்துடன் அந்த போட்டி பற்றி சிறு அலசல் போடலாம் என நான் நினைக்கிறேன்.அந்த வகையில் நேற்று காந்தி ஜெயந்தியை முடித்துக்கொண்டு புதிய இடுகையில் உங்களை சந்திப்பதிலும் புதிய ஒரு மாதத்திலும் உங்களை சந்திக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.


இன்று திங்கட்கிழமை நடைபெற்ற துடுப்பாட்ட போட்டியில் ஆசிரியர்களை எதிர்த்து எமது கல்லூரி மாணவர்கள் மோதினர் இதில் எமது ஆசிரியர்கள் வெற்றி பெற்று கொண்டனர் அந்த வகையில் எனது சார்பாக ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்களை தெருவித்துகொள்கிறேன் எமது ஆசிரியர்களில் சச்சின் னும் இல்லை முரளிதரனும் இல்லை அவ்வாறு இருந்த போதும் இளமை மிகு மாணவர்களை இலகுவில் வெற்றி கொண்டனர் இருந்த போதும் என்னால் இதனை முழுமையாக கண்டுகளிக்க முடிய வில்லை அந்தவகையில் மனம் வருந்துகிறேன்



முதலில் துடுப்பெடுத்தாடிய எமது கல்லூரி ஆசிரியர்கள் சிறப்பான துடுப்பாட்டத்தால் சுமார் பத்து பந்து பரிமாற்றத்தின் போது நூறு ஓட்டங்களை குவித்திருந்தனர் (இது சுமாரான ஓட்டம் ) எமது மாணவர்கள் பாவம் இல்லையா? என்ன ஒரு அடி அதிலும் ஒருவனின் பந்தில் மூன்று இமையமலை ஆறு ஓட்டங்கள் (6,6,6) அத்துடன் முடித்தார் அந்த மாணவன் பந்து வீசுவதை (வாழ்க்கையில் கூட நினைத்து பார்க்க மாட்டார்)

அத்துடன் ஒரு மாதிரியாக தப்பி பிழைத்தனர் எமது மாணவர்கள் (ஐயோ காணும் காணும்)

அதனைதொடர்ந்து துடுப்பெடுத்தாடிய எமது மாணவர்கள் வந்த வேகத்திலேயே பவிலியன் அனுப்பப்பட்டு கொண்டிருந்தனர் ஒருமாதிரியாக சூரிய கிரகணம் வருவது போல இடைக்கிடையில் ஒரு ஆறு ஓட்டங்கள் பெறப்பட்டது (சும்மா இப்படியாவது அடித்தால் தான் எங்களை நம்புவார்கள் என்ற நினைப்பு மாணவர்களுக்கு) சில வீரர்கள் ஓட்டம் எதையும் ப்ராத நிலையில் வெளியேற்றப்பட்டனர் (மட்டையை நினைத்து கூட பார்க்க மாட்டார்கள் எமது வீரர்கள்)



ஒரு மாதிரியாக முடிவுக்கு வந்தது அந்த போட்டி அத்துடன் என்னும் ஒன்று என்னால் அங்கு நடைபெற்ற போட்டியின் பொது புகைப்படங்கள் பெற முடியாத காரணத்தால் (கருவிகள் ஒன்றும் யாவரிடமு  இல்லை பாடசாலையாகையால்)  நான் இங்கு தரவில்லை இங்கு தந்திருப்பையை எல்லாம் இணையத்தில் இருந்து பெறப்பட்டவையாகும் (படங்கள்)

இந்த முறையும் ஆசிரியர் தினம் சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துக்களை தெருவித்துக்கொள்கிறேன்