கும்பழாவளை ஆலய திருவிழாக்கள்

  • 0
எமது கிராமத்தின் ஆலயங்களில் கும்பழாவளை ஆலயம் மிக சிறப்பாக கொடி ஏறி தற்போது அதன் அனைத்து நிகழ்வுகளும் முடிவடைந்த நிலையில் உள்ளது அது பற்றி நோக்குவோம்.
எமது ஆலயம் ஆனது 07/05/2011 அன்று கொடி ஏத்தத்துடன் ஆரம்பித்து பின்பு கண்ணை கவருகின்ற திருவிழாக்களுடன் சென்று தற்போது முடிவடைந்துள்ளது இவ் ஆலயத்திலே தேர் திருவிழா மற்றும் சப்பற திருவிழா என களை கட்டும் திருவிழாக்களும் நடைபெற்றது.அதிலே குறிப்பாக திருவிழாவில் தமிழ் நாட்டு பிரபல்ய பாடகரான உன்னி மேனன் அவர்கள் வருகைதந்து ஏழாம் திருவிழாவை களை கட்ட செய்தார்.
அத்துடன் ஈழத்து பாடகர்களும் வந்து அளவெட்டி மக்களை மகிழ்வித்தனர் எமது இந்த கோவிலை பொறுத்த வரையில் திருவிழாக்கள் எல்லாம் வெகு விமர்சையாக நடைபெற்றது பின்பு 18/05/2011 அன்று கொடி இறக்கத்துடன் முடிவுக்குவந்தது இத் திருவிழாவில் அளவெட்டியில் உள்ள மக்கள் எல்லோரும் வந்து தமது கடன்களை முடித்து விட்டு சென்றனர் அத்துடன் இத் திருவிழாவை பார்வையிடுவதற்காக வெளிநாடுகளில் இருந்து கூட மக்கள் வந்தனர்.

No comments:

Post a Comment