இரைதேடலின் ஈரம்!

  • 1




கெர்ரி வண்டர் வேல்ட் (GERRY VAN DER WALT) என்பவர் புகழ் பெற்ற புகைப்பட கலைஞ்ஞன் காமெராவை கழுத்தில் போட்டுக்கொண்டு அவர் காடு மேடு எல்லாம் அலைவார் அந்த அலைதலின் முடிவில் அற்ப்புதமான படங்கள் அவரது கேமரா சிக்கியிருக்கும் இப்படி 2009 ஆம் ஆண்டில் ஒரு நாள் தென்னாபிரிக்கா காட்டுக்குள் புகுந்தார் அங்கு ஒரு வேட்டையாடலை அவரது கேமரா விழுங்கத் தொடங்கியது


பெரும் பசியோடு மான் ஒன்றை துரத்தியது பெண் சிங்கம் மானும் தன்னால் இயலுமட்டும் ஓடிக்கொண்டே இருந்தது சிங்கம் கலைத்தாலும் மானை வேட்டை யாடுவதேன்றே உறுதியாக இருந்தது கடைசியில் மானின் தப்புதல் பற்றிய கனவு சிங்கத்தின் கடைசிப்பாச்ச்சலில் தகர்ந்தது தனது முழுப்பலத்தையும் பிரயோகித்து ஒரே பாச்ச்சலில் மானின் கழுத்தை கவ்வியது



மான் துடிதுடித்தபடி விழுந்தது இனி ஓட இடமில்லை காயத்தோடு ஓடினாலும் சிங்கத்திடமிருந்து தப்ப இடமில்லை அதனால் அமைதியாக சாவை சந்தித்தது ஏற்கனவே சிங்கத்துக்கு பெரும் பசி மானின் மரணத்தின் பின்பு ஒரு நொடியும் தாமதிக்க அது விரும்பவில்லை எவ்வளவு வேகமாக மானை குதற முடியுமோ அவ்வளவு வேகமாக சதைத்துண்டுகளை தன வயிற்றுக்குள் செலுத்தியது அப்போதுதான் சிங்கம் எதிர்பாராதது ஒன்று நிகழ்ந்தது



அந்த பெண்மானின் வயிற்றுக்குள் குட்டி இருப்பதை காண நேர்ந்தது.அவ்வளவுதான் வாயில் கௌவியிருந்த சதைத்துண்டை கீழே போட்டு விட்டு அந்த குட்டியை வெளியே மீட்டெடுத்து ஆனாலும் பூரண வளர்ச்சி பெறாததாலும் அந்தக்குட்டி கருப்பையை விட்டு வெளியே வந்த தருணத்தில் இருந்து உயிருக்காகப் போராடத்தொடங்கியது.

சிங்கத்துக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை மான் குட்டியை காப்பாற்ற வேண்டுமென்ற தவிப்போடு அங்கும் இங்கும் அலைந்து திரிந்தது யாரிடமாவது உதவி கேட்கும் பாவனை அந்த ஓட்டத்தில் தெரிந்தது பெண் மானை கலைத்த போது இருந்த மிடுக்கும் வெறியும் இப்போது சிங்கத்தின் ஓட்டத்தில் இல்லை ஒரு உயிரை காப்பாற்றவேண்டும் என்ற தவிப்பே அதிகமாக இருந்தது






ஒரு பக்கம் ஓடி விட்டு பின்னர் அதே வேகத்தோடு திரும்பிவந்து மான் குட்டியை முகர்வதும் கண்களை அங்கும் இங்கும் அலைய விடுவதுமாக சிங்கத்தின் போராட்டம் தொடங்கியது மானை வேட்டையாடுவதில் வென்றிருந்த அந்த சிங்கம் மான் குட்டியை காப்பாற்றும் போராட்டத்தில் தோற்க்கவேண்டியிருந்த்து.ஒரு கட்டத்தில் சிங்கம் முகர்ந்து பார்த்த பொழுது மான் குட்டி உயிர் அற்றுப்போயிருந்தது பின்னர் குட்டியையும் மானையும் பார்த்த படி நீண்ட நேரம் அப்பிடியே உர்க்காந்திருன்தது ஒரு கட்டத்தில் சிங்கம் சரிந்து விழுந்தது

இதை எல்லாம் ஒன்றும் விடாமல் பதிவு செய்த ஜெர்ரி யும் அவரது குழுவினரும் சிங்கம் கீழே விழுந்தவுடன் ஓடிச்சென்றனர் அங்கே வெழுந்து கிடந்த சிங்கத்துக்கு உயிர்கொடுக்க முயன்றும் பலன் அளிக்கவில்லை

ஒருபக்கம் வாட்டிய பசியை சமாளிக்க முடியாமலும் தாயையும் குட்டியையும் கொன்ற குற்ற உணர்ச்சியாலும் இரையை உண்ணாமல் தன்னையே நொந்து மடிந்து போய்க்கிடந்தது அந்த பெண் சிங்கம்


இயற்கையின் விதிகளை மீறி தாய்மை பரிதாபம் சிறுசுகள் மீதான கருணை என்ற உணர்வுகள் ஐந்தறிவு படைத்த ஒரு ஊனுண்ணி விலங்கின் நெஞ்சத்தை கூட கரைத்து விடுகின்றன அனால் மனிதர்கள் மாத்திரம் தங்களுக்கு மட்டுமே இருப்பதாக மார்புதட்டிகொள்ளும் மனிதத்தை அடகு வைத்து விட்டு மிருகங்களாக மாறிகொண்டிருக்கிறார்கள் சில வேளைகளில் அத்தகைய கொடூர மனிதர்களாக தங்களுடன் ஒப்பிடுவதற்காக வேலன்குகள் கோபித்துகொள்ளக்கூடும்.மனித்து கொள்ளுங்கள் விலங்குகளே




ஆனால் ஒரு ஐந்து அறிவு ஜீவனுக்கு உள்ள குற்ற உணர்வு கூட ஆறு அறிவு மனிதனுக்கு இல்லையே!!!!!

"
மனிதம் என்றோ மரணித்து விட்டது "




Man vs Wild-டிஸ்கவரி

  • 0
டிஸ்கவரி சனலை பார்ப்பவர்கள் உண்டா?
இருந்தால் உடனே கையை தூக்கவும்! இனி என்ன செய்ய தூக்கிய கையை கீழே வைத்து விட்டு மிகுதியை வாசியுங்கள்

என்ன ஒரு அழகான தமிழ் சனல் சும்மா சன் டிவி ,கே டிவி,விஜய் டிவி என்று எத்தனையோ தமிழ் சானல்களுக்கு மத்தியிலும் தமிழை தமிழாக காட்டிநிக்கின்றது இந்த அந்நிய டிவி தமிழ் சானல்களில் 24 மணித்தியாலங்களில் சுமார் 5 மணித்தியாலம் எதோ ஆங்கிலத்தில் அலட்டுவார்கள் மிச்சம் இருகின்ற நேரங்களில் எதோ பாட்டு பாடுவார்களாம் (சூப்பர் சிங்கர்) சாப்பிட்டு திமிர் முறிக்கின்ற வேலை அது

டிஸ்கவரி சனல் பார்ப்பவரா நீங்கள்? (தமிழில்கூடப் போட்டபிறகும் அதைப்பார்க்காமல் ‘தங்கம்’ பார்ப்போர் மேலே தொடரவேண்டாம்.) அதில் ஒளிபரப்பாகும் Man vs Wild பார்ப்பதுண்டா? 


பியர் கிரில்ஸ் என்னும் ஓய்வுபெற்ற பிரிட்டிஷ் ராணுவ வீரர் நாம் மனித உதவிகளற்ற வனாந்தரங்களில் தனியாக மாட்டிக் கொண்டால் என்ன செய்து உயிர்தப்பலாம் என்று உலகத்தின் ஒவ்வொரு மரணப்பொறிகளிலும் விழுந்து விழுந்து எழுந்துகாட்டுகிறார். நாளைக்கே வாழ்க்கை நம்மையும் ஒரு மரணப்பொறியில் மாட்டிவிடலாம் என்ற உண்மையை உணர்ந்தவர்கள் அதைப்பார்த்து வாழ்க்கையின் சவாலை ஏற்கத் தயாராகலாம், தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளலாம். அல்லது கயிறு, கிறபிக்ஸ், மற்றும் டூப்களின் உதவியொடு செய்து காட்டினாலும் ஒரு தனி மனிதனாக இன்று அதை செய்வது போற்றத்தக்கது


அவர் உயிரோடு தவளை பாம்பு என கையில் கிடைப்பதை எல்லாம் சாப்பிட்டு உயிர் வாழ கற்று தரும் நிகழ்ச்சி மிக புகழ் பெற்றது
மிஞ்சி மிஞ்சி போனா நாம என்ன என்னத்த திம்போம்? கோழி , ஆடு, மீன், இராலு, நண்டு சிலபேரு மாடு, பன்னி கூட... ஆனா இவிங்க இருக்காய்ங்களே... நடக்குறது, ஓடுறது, ஓடுறது போடுறது, தாவுறது, தவழ்றதுலருந்து உயிரோட எதாவது கண்ணுக்கு தெரிஞ்சாலே புடிச்சி திண்ணுடுறாய்ங்க. ஆத்தாடி .டிஸ்கவரி Man Vs Wild la ஒருத்தன்

அப்புறம் படுக்கும் போது சொல்றான். "நா இந்த நெருப்ப அணைக்க மாட்டேன்.. இது தான் என்ன காட்டு விலங்குகள்கிட்டருந்து பாதுகாக்க உதவும்"

டேய் அதுங்க ஏண்டா உன்ன தேடி வரப்போவுது...உன்னத்தேடி ஒரு காட்டு விலங்கு வருதுண்ணா அதுக்கு விதி முடிஞ்சி போச்சின்னு அர்த்தம்டா!!

இப்படி பயனுள்ள நிகழ்ச்சிகளை பார்க்கிறதை விட்டுட்டு எது டான்சு,பாட்டு நிகழ்ச்சிகளை பாத்து கொண்டே இருங்கடா நாடும் வீடும் விளங்கிடும்
இந்த பதிவை நான் இடக்காரணம் நான் பார்த்து கொண்டிருக்கும்போது பின்னால் ஒரு அசரீதி திரும்பிப்பார்த்தால் வேற யார் ?

இதுகளை பார்க்கிறதை விட்டுட்டு போய் படிக்கிற வேலையை பார்
பிறகு என்ன நடையை கட்டியதுதான் அதன் பிறகு மாமியார் மருமகள் அடிபாடுதான் (நாடகத்தை சொன்னேன்)