கும்பழாவளை ஆலய திருவிழாக்கள்

  • undefined
    undefined
  • 0
எமது கிராமத்தின் ஆலயங்களில் கும்பழாவளை ஆலயம் மிக சிறப்பாக கொடி ஏறி தற்போது அதன் அனைத்து நிகழ்வுகளும் முடிவடைந்த நிலையில் உள்ளது அது பற்றி நோக்குவோம்.




எமது ஆலயம் ஆனது 07/05/2011 அன்று கொடி ஏத்தத்துடன் ஆரம்பித்து பின்பு கண்ணை கவருகின்ற திருவிழாக்களுடன் சென்று தற்போது முடிவடைந்துள்ளது இவ் ஆலயத்திலே தேர் திருவிழா மற்றும் சப்பற திருவிழா என களை கட்டும் திருவிழாக்களும் நடைபெற்றது.அதிலே குறிப்பாக திருவிழாவில் தமிழ் நாட்டு பிரபல்ய பாடகரான உன்னி மேனன் அவர்கள் வருகைதந்து ஏழாம் திருவிழாவை களை கட்ட செய்தார்.




அத்துடன் ஈழத்து பாடகர்களும் வந்து அளவெட்டி மக்களை மகிழ்வித்தனர் எமது இந்த கோவிலை பொறுத்த வரையில் திருவிழாக்கள் எல்லாம் வெகு விமர்சையாக நடைபெற்றது பின்பு 18/05/2011 அன்று கொடி இறக்கத்துடன் முடிவுக்குவந்தது இத் திருவிழாவில் அளவெட்டியில் உள்ள மக்கள் எல்லோரும் வந்து தமது கடன்களை முடித்து விட்டு சென்றனர் அத்துடன் இத் திருவிழாவை பார்வையிடுவதற்காக வெளிநாடுகளில் இருந்து கூட மக்கள் வந்தனர்.

சென்னையில் ஒரு பார்வை

  • undefined
    undefined
  • 0
எமது சென்னை அணியை பொறுத்தவரையில் இந்திய அணி மாதிரியே காணப்படுகிறது.ஏனென்றால் அணி தலைவராக தோனியும் அதனை தொடர்ந்து எமது அணி துடுப்பாட்டத்தில் மிகபலம் பொருந்திய ஒரு அணியாக காணப்படுகிறது.இந்த வகையில் பந்துவீச்சு இந்திய அணி மாதிரியே காணப்படுகிறது கூறும் அளவுக்கு பந்துவிச்சு சிறப்பாக காணப்படவில்லை இருந்த போதும் அஸ்வின் ,மோர்கல் ,போலின்சர் என்போர் சிறப்பான பந்துவீச்சுக்களை ஒரு சில போட்டிகளில் காணக்கூடியதாக உள்ளது.




துடுப்பாட்டத்தை பொறுத்தவரையில் raina டோனி பத்திரிநாத் மோர்கல் ஹசி விஜய் போன்றோர் சிறப்பான துடுப்பாட்ட வீரர்களாக சென்னை அணியில் காணப்படுகிறார்கள் இந்த வகையில் கடந்த முறை i.p.l போட்டியில்,சாம்பியன் லீக் போட்டியில் வெற்றி பெற்ற எமது அணி இந்தமுறையும் தாங்கள் சளைச்சவர்கள் இல்லை என்பதனை நிருபித்து இருகின்றனர்.ஒரு சில போட்டிகளில் எமது அணியை பொறுத்தவரையில் டோனி அணித்தலைவராக இருப்பது எமக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதமாக நாங்கள் கருத வேண்டும் ஏன் என்றால் இந்த முறை world cup பெற்ற அணியையும் இவர் வழிநடத்திய ஒரு மகாவீரனாக காணப்படுகிறார்.




அதிஷ்டம் மிக்க ஒரு நாயகனாக வலம்வருகிறார் அத்துடன் எமது அணியை இந்தமுறையும் வெற்றி பெற்று தரும் ஒரு வீரர் என நான் நினைக்கிறேன் எனவே என்ன நடக்கும் என்பதனை பொறுதிருந்து பார்ப்போம்.