வாழ்த்துக்கு நன்றி,இப்படிக்கு மோசி

  • undefined
    undefined
  • 1

என் எல்லா பங்காளிங்க, செல்லக் குட்டிங்க. டார்லிங்குங்க. தங்கச்சிங்க, அண்ணங்க,, தம்பிங்க,அக்காங்க,, அம்மா, ஆட்டுக் குட்டி எல்லாரும் எனக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்த தெரிவிக்க இருக்கின்ற அனைத்து உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் யாரையாவது தவற விட்டிருந்தால் மன்னித்துக்கொள்ளவும் இப்படிக்கு

ஹன்சிகாவின் முன்னாள் காதலரும்
பாவனாவின் இன்னாள் காதலரும்
கயாலகர்வாளின் கணவருமான
மோசியின் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்


பூமியின் பிறந்தநாள் என்றென சொல்லவா காதலின் பிறந்தநாள் அன்றுதான் அல்லவா


யாருக்காவது பார்ட்டி வேணுமெண்டால் இந்த முகவரிக்கு வந்து என்னுடன் பகிரிந்து கொள்ளுங்கள்

இடம்;-
பேஸ்புக்
பேஸ்புக் மெயின்ரோடு,
த்விட்டேர் குறுக்குச்சந்து,
விவேகானந்தர் தெரு,
பேஸ்புக்.

இத்தருணம் தங்கள் நல்வரவை நாடும்
MS


தவளை VS மனிதன்

  • undefined
    undefined
  • 1

தவளை

எல்லோருக்கும் தெரிந்திருப்பது என்ன வென்றால் கிணற்றுத்தவளை என்பதுதான்.ஆனால் இப்பத்தைய தவளைகள் எல்லாம் நவீன நாகரிக உலகத்திலே பெரிதும் பங்கு வகிக்கின்றது என நான் நினைக்கேறேன்.ஏனெனில் 

கிணற்றுத்தவளை என்பது கிணற்றுக்குள்ளே இருப்பது என்று அர்த்தம் இல்லை வெளி உலகம்தேரியாது இருப்பது என்று அர்த்தம் அந்தவகையில் எனது வீட்டில் இருக்கும் ஒரு தவளையை பற்றி ஒரு இடுகை இடவேண்டும் என்ற அவா இதனால் இந்த இடுகையை உங்களுக்கு தருகிறேன் 

ஒரு அழகிய தவளை (வேண்டாம்)இப்படி ஒரு அறிமுகம் .தவளைகள் பொதுவாக வீட்டுக்குள் இருந்தால் செல்வம் வரும் என்று கூறுவார்கள் பெரிய மனிதர்கள்.ஆனால் நான் கண்ட உண்மை என்றால் செல்வம் வருகுதோ இல்லையோ கட்டாயம் பாம்பு வரும் என்பது தான்.அந்தத்தவளை எனது படுக்கை அறையிலே உள்ளது அந்தத்தவளையை நான் மூன்று மாத காலமாக அவதானித்து வருகிறேன்.அந்தத்தவளையினுடைய வாழ்க்கை ஒரு கட்டுக்கோப்பானதாக இருக்கும் என்பதில் அச்சம் இல்லை ஏனெனில் 

 
அந்திமாலை அல்லது எங்களுக்கெல்லாம் நாடு நிசி எட்டு மணியளவில் எனது அறையை வெட்டு வெளியே வரும் (தினமும்) பின்பு அதிலே வாசலில் நின்றபடி சுற்றும் முற்றும் பார்த்தபின்பு மெதுவாக சுவரோடு சுவராக வெளியே வந்து வேடும் பின்பு பின்வாசல் வழியாக வீட்டிற்கு வெளியே சென்றுவிடும் இவ்வாறு வலிமையாக நடைபெற்று வருகின்றது பின்பு விடியலில் சுமார் ஒரு ஐந்து மணியளவில் பின்கதவூடு வந்து ஒட்டிக்கொண்டு நிற்கும் நாங்கள் வேலே போகும் பொது கதவை திறந்தால் ஒரு வழியாக உள்ளே வந்து எனது அறைக்குள் சென்று வேடும் இவ்வாறு தினமும் நடை பெற்று வருகின்றது 

இன்றைய உலக மனிதர்கள் கூட இவ்வாறு தமது வாழ்க்கை கடமைகளை நிறைவேறுவதில் சிறப்பாக இருப்பார்கள் என்பதில் என்னக்கு சந்தேகமே?
அந்தத்தவளை எல்லோருடைய வாழ்க்கைக்கும் ஒரு முன்மாதிரியாக வரவேண்டும் என்றே இந்த இடுகையை எழுதினேன்

ஐந்து அறிவு படைத்த இந்த தவளைக்கே இவ்வளவு இருக்கும் போதுஆறு அறிவு படைத்த எம்மிடம் ஏன் இந்த நற்ப்பன்புகள் இருக்க கூடாது?

நன்றி மீண்டும் ஒரு இடுகையில் உங்களை சந்திக்கேறேன் (நானும் எனது நண்பர்களும் ஆல் சிலோன் சுற்றுலாவுக்காக ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறோம் அதில் வரும் சுவாரசியமான இருக்கைகளை உங்களுக்கு மற்ற இடுகளைகளில் தருகிறேன் 



அம்மாவின் பிறந்தநாள்

  • undefined
    undefined
  • 0

அம்மாவின் பிறந்தநாள்

I love my Mom

என்ன அம்மாவை பற்றி பேசுறேன்னு யோசிக்கறிங்க‌ போல ஆமாங்க இன்று ரொம்ப முக்கியமான நாள் எனக்கு...

இன்று என் அம்மாவின் பிறந்த நாள்!!!

அம்மாவாய் மட்டும் அல்ல இன்று வரை எனக்கு நல்ல தோழியாகவும் என்னை வழிநடத்துபவர்!!!


அம்மாவின் பிறந்தநாள்

ஆயிரந்தான் கவிசொன்னேன்
அழகழகாய் பொய் சொன்னேன்
பெத்தவளே ஒம் பெருமை
ஒத்தவரி சொல்லலையே!

எழுதவோ படிக்கவோ
ஏலாத தாயப்பத்தி
எழுதி என்ன லாபமின்னு
எழுதாமப் போனேனே!
என்ற முத்தான வரிகளை கேட்டவுடன் மூச்ச்டைந்து நின்றேன்.

என்னை சுவாசிக்க வைத்த
அவளுக்காக நான்
வசித்த முதல் வார்த்தை
"அம்மா".


அம்மாவின் 48 வது அகவைக்காலம் சிறப்பாக இருக்க 
இறைவனை வேண்டி நிக்கிறேன் என்னால் அம்மாவுக்கு உதவிகள் தான் செய்ய முடியாமல் போனாலும் உபத்திரம் செய்ய கூடாது எண்டு நினைத்துக்கொண்டு இந்த வாழ்த்துரையை எழுதுகிறேன்.

                      நான் வாழும்வரை,உன்னையும்வாழவைப்பேன்

உலகில்
அனைத்துக்கும்
வரையறை வைத்திருக்கும்
அந்த கடவுள்,
உன்னை அழைத்திடவும்
உன் புகழ் பாடிடவும்
என்னை கோடிட்டு
நிறுத்தி விடவில்லை!


மூன்றே சொற்களில்
பலநூறு பூக்களின்
வண்ணமாய்
என்னில் கலந்த‌
என் தேவதை
அம்மா!!!

(இன்று என் அம்மாவின் பிறந்தநாள்.. அவர் என்றும் நலம் வாழ இறைவனை பிராத்திக்கிறேன்..அம்மாவுக்காக ஒரு சின்ன சமர்பணம்...)

கட்டாரில் பிரமாண்ட கால்பந்து மைதானங்கள் -Qatar 2022 World Cup Powered Stadiums

  • undefined
    undefined
  • 0
கடந்த கால உலக கோப்பை மறக்க முடியாது . இன்னும் 10 ஆண்டுகள் மீதமுள்ள நிலையில் கட்டார் தனது கட்டுமான பணிகளை தொடங்கியுள்ளது $ 4 பில்லியன் செலவாகும் என்று அரங்கங்களில்சம்பந்தப்பட்ட திட்டங்களை வெளியிட்டது, அவர்கள் களத்தில்வெப்பநிலை உறுதி மற்றும் அரங்கத்தில் கீழே 81 டிகிரி பாரன்ஹீட் (27டிகிரி செல்சியஸ்) உள்ளது என்று ஒரு குளிர்விப்பு அமைப்பு அடங்கும்.

கட்டார் கூட கால்பந்து போட்டியில் ஒரு அதிவேக ரயில் நெட்வொர்க்மற்றும் விமான நிலையம் உட்பட தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது திட்டங்களில் $ 42,9பில்லியன் செலவு திட்டத்தை காண்பித்தது. 2022 இல் பிரமாண்டமான் உலகக்கிண்ண கால்ப்பன்ப்தாட்ட போட்டிகளை இன்னக் காணலாம் என தெருவித்துள்ளது அதிலே சில போட்டிகள் நடைபெறப்போகும் இடங்கள் 

                                                     Al - Rayyan அரங்கம்:
 செய்தி, விளம்பரங்களில், விளையாட்டுமேம்படுத்தல்கள் மற்றும் தற்போதைய போட்டியில் நடைபெறும் தகவல் மற்றும்போட்டிகளில்: ஒரு திட்டங்களும் ஒரு திரையில் செயர்ப்படுத்தப்ப்படுமும் என்று அறிவித்துள்ளது "ஊடக முகப்பில்," அடங்கும் வடிவமைக்கப்பட்டது.



                                                   The Doha Port stadium:
 இது ஒரு கடல் விலங்கை நினைவூட்டுவதாகவும் அதனுடைய இருப்பிடத்தை நினைவூட்டுவதாகவும் அமையும் என அறிவித்துள்ளது 



                                                     The Al-Gharafa stadium: 
முகப்பில் கால்பந்து, அதே போல் நட்பு, மரியாதைமற்றும் புரிதல் சின்னமாக பொருட்டு, 2022 FIFA உலக கோப்பைக்கு தகுதி பெறும் அனைத்து நாடுகளின் கொடிகள் வண்ணங்கள் வரைசெய்யப்படும்.



                                                     The Al-Shamal stadium: 
இது வடிவம் பாரம்பரிய dhow, அரேபிய வளைகுடாஉள்ளூர் மீன்பிடி படகுகள் இருந்து எடுக்கப்பட்டது. 


                                                The Umm Slal stadium: 
கட்டடக்கலை கருத்து அருகில் அழகான பழையகோட்டையில் இருந்து அதன் வடிவம் எடுக்கப்பட்டது  


                                                      The Al-Khor stadium: 
இது ஒரு ஸீஷெல் ஈர்க்கப்பட்டு ஒரு மாபெரும்கண் போல் இருக்கிறது. இது ஒரு நெகிழ்வான கூரை மற்றும்தோட்டங்களும் உள்ளன.


                                                     The Sports City stadium: 
இந்த "கட்டமைப்பு." இடம் பாரம்பரிய அராபியகூடாரத்தில் இருந்து அது எடுக்கப்பட்டது 

                                                         The Al-Wakrah stadium



                                                      The Qatar University stadium


இப்பவே இப்படி என்றால் அப்ப சொல்லவா வேணும் 


அமேசான் காடு-Amazon Rainforest

  • undefined
    undefined
  • 2
அமேசான் படுகை என்பது தென்னமெரிக்காவில் அமேசான் ஆறும் அதன் துணையாறுகளும் பாயும் பகுதிகளைக் குறிக்கும். இதன் பெரும்பகுதி (60%) பிரேசில் நாட்டிலும், மற்றும் பெரு முதலிய நாடுகளிலும் பரந்துள்ளது. தென்னமெரிக்காவில் உள்ள அமேசான் மழைக்காடுகள் உலகிலேயே மிகப்பரந்த மழைக்காடுகள் ஆகும். இது 8,235,430 ச.கி.மீ அடர்ந்த காடுகளைக் கொண்டது. பல நூற்றாண்டுகளாக இது இப்பகுதியையும் அங்கு வாழும் உயிரினங்களையும் பாதுகாத்து வந்துள்ளது. அமேசான் ஜங்கிள் என்று அழைக்கப்படும் அமேசான் மழைக்காடு, தென் அமெரிக்காவில் அமைந்துள்ளது மற்றும் அமேசான் நதி படுகையின் உள்ளடக்கியதாக காடு இருக்கிறது. அமேசான் நதி வரையில்வெளியேற்றும் பெரிய நதியாக கருதப்படுகிறது. காட்டின் மிகவும் பெரும்பாலான பகுதி பிரேசில் (60%), பெரு (13%) மற்றும் வெனிசுலா போன்றசில நாடுகளில், கொலம்பியா, பிரஞ்சு கயானா, ஈக்வேடார், பொலிவியா,கயானா, மற்றும் சூரினாம் உள்ளது. அமேசான் மழைக்காடு உலகின் மிக பெரிய மற்றும் மிக பழமை மிக்க மழைக்காடு மற்றும் கிரகத்தின் மழைக்காடுகளில் அதிக வகையான தாவர இனங்களும் விளங்கு இனங்களும் இங்கேயே காணப்படுகிறது.

அமேசான் நதி மேற்கில் இருந்து கிழக்கு திசையில் பாயும், வரலாற்று படி, அமேசான் காடு மில்லியன் ஆண்டுகளுக்கு முதல் உருவானது.அமேசான் மழைக்காடு அல்லது Amazonia பாலூட்டிகள், மீன்,பறவைகள், ஊர்வன மற்றும் நிலநீர் வாழும் உயிரினங்களின்உள்ளடக்கியஒரு பெரிய பல்வேறு மர்மமான மற்றும் சக்தி வாய்ந்த இடமாக கருதப்படுகிறது

பலவகையான மருத்துவ குணங்கள் கொண்ட தாவரங்கள் இங்கு வளர்வதால் இங்கு பலபல மருத்துவ ஆராச்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன .அமேசான் படுகையில் 12000 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 16-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர் வருகையின் போது பலநூறு இன மக்கள் இருந்தனர். எனினும் 90 சதவீதப் பழங்குடிகள் ஐரோப்பியத் தொற்றுநோய்களின் காரணமாக ஐரோப்பிய வருகையின் முதல் நூறு ஆண்டுகளுக்குள் அழிந்து விட்டனர்.
இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதி தொடங்கி, மக்கட்தொகைப் பெருக்கம், நெடுஞ்சாலைத் திட்டம் போன்றவற்றால் காடுகள் அழிக்கப்படுகின்றன. அமேசான் படுகையில் உள்ள காடுகள் மிகவும் அடர்ந்து காணப்படுகின்றன. எனவே இங்கு பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் வாழ்கின்றன. இவை மனிதர்கள் செல்ல முடியாத அளவுக்கு அடர்த்தியாக இருப்பதால் இங்குள்ள உயிரினங்களின் எண்ணிக்கை இன்றளவும் தெளிவாக வரையறுக்கப்படவில்லை.

உலகில் பாதிக்கும் மேற்பட்ட மழைக்காடுகளும் மிகப்பெரியதும் உயிரினப் பன்மை நிறைந்ததுமான மழைக்காட்டினை அமேசான் தன்னகத்தே கொண்டுள்ளது. உலகில் வாழும் உயிரின வகைகளுள் பத்தில் ஒரு பங்கு அமேசான் மழைக்காடுகளில் வாழ்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதுவே உலகின் மிகப்பெரிய உயிரினத் தொகுப்பாகும். இப்பகுதி 2.5 மில்லியன் பூச்சியினங்களுக்கும் 10,000-க்கும் அதிகமான தாவரவகைகளுக்கும், ஏறத்தாழ 2000 பறவை, பாலூட்டிகளுக்கும் தாயகமாக விளங்குகிறது. உலகில் உள்ள அனைத்துப் பறவைகளில் ஐந்தில் ஒன்று இம்மழைக்காடுகளில் வசிக்கிறது. 


அண்டெஸ் மலைத்தொடரின் கிழக்கில் இருந்து அமேசான் மழைக்காடு தொடங்குகிறது. இதுவே உலகின் மிகப்பெரிய மழைக்காடும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்ததும் ஆகும். இது உலகில் வெளியடப்படும் கார்பன்-டை-ஆக்சைடு வளியை பெருமளவில் உட்கொள்ளும் திறன் வாய்ந்தது. இந்த மழைக்காடுகளைக் காப்பது இந்நாட்களில் முக்கிய விடயமாக இருக்கிறது.

மிகவும் ஈரப்பதம் கொண்ட அமேசான் படுகை இம்மழைக்காடுகளுக்கு அரணாக விளங்குகிறது. இப்பகுதியில் அமேசான் ஆறும் இதன் நூற்றுக்கணக்கான துணையாறுகளும் மிகவும் மெதுவாக ஓடி பின் கடலில் கலக்கின்றன.

உயிரியல் வளம் மிக்க இம்மழைக்காடு, 25 இலட்சம் வகையான பூச்சியினங்களுக்கும் ஆயிரக்கணக்கான தாவர வகைகளுக்கும் ஏறத்தாழ இரண்டாயிரம் பறவைகள், பாலூட்டிகள்ஆகியவற்றிற்கும் இருப்பிடமாக விளங்குகிறது. உலகின் மொத்தப் பறவையினங்களில் ஐந்தில் ஒரு பகுதி இக்காடுகளில் வசிக்கின்றன. அமேசான் காடுகள் பெரும்பாலும் பிரேசில்நாட்டில் அமைந்துள்ளதால், அந்நாடு உல்கிலே உருசியாவிற்கு அடுத்த இரண்டாவது பெரிய காடு வளத்தை (பரப்பளவில் 4,776,980 ச.கி.மீகள்)கொண்டதாக உள்ளது.

உலகின் உயிரினங்களில் மூன்றில் ஒரு பங்கு அமேசான் காடுகளில் வசிக்கின்றன. அமேசான் ஆற்றுப்படுகையும் மழைக்காடுகளும் 5.4 மில்லியன் சதுர கி.மீ (2.1 மில்லியன் சதுர மைல்) க்கும் மேலானதாகும். அமேசான் ஆற்றில் 3,000 க்கும் அதிகமான மீன் வகைகள் கண்டறியப்பட்டுள்ளது.

அமேசான் ஆற்று டால்பின் அமேசான் மற்றும் ஒரினோகோ ஆற்றுப் பகுதியில் வசிக்கிறது. இதுவே ஆற்று டால்பின் வகைகளில் மிகப்பெரியதாகும். இது ௦௦ அடி வரை வளரக்கூடியது.

இங்கு அதிகளவில் பிரன்கா என்ற மீன் வகை காணப்படுகிறது. இவை கூட்டமாக வாழும். இவை மாடு, மான் போன்ற உயிரினங்களை தாக்ககூடியவை. மனிதர்களும் தாக்கப்பட்டுள்ளார்கள். எனினும் சில வகை பிரன்காக்களை மனிதர்களை தாக்குகின்றன. குறிப்பாக சிவப்பு வயிற்று பிரன்கா மனிதரை தாக்கும் வகையாகும்.

அனகோண்டா வகை பாம்புகள் அமேசான் படுகையின் கரையில் காணப்படுகிறது. இது பெரிய பாம்பினங்களில் ஒன்றாகும். இவை பெரும்பாலும் நீரிலேயே வாழ்கின்றன. இதன் மூக்கு பகுதி மட்டும் நீர் மட்டத்துக்கு வெளியே இருக்கும்.



இங்கு சில தகவல்கள் விக்கிபிடியாவில் இருந்து பெறப்பட்டன் படங்கள் கூகிள் image 



பிக் மேட்ச் ஒரு கதை (big match)

  • undefined
    undefined
  • 0
பிக் மேட்ச் ஒரு கதை

           எங்களுடைய கல்லூரிக்கதையை கனாக்காணும் காலங்கள் (விஜய் t.v)கூட கைகட்டி நின்று பார்க்க வேண்டியதுதான் எவ்வளவு சுகம் எவ்வளவு ஆனந்தம் நினைத்தாலே மனம் குளிருகின்றது


                 இது எனது இந்த இடுகையின் ஆரம்பம்


கல்லூரியின் இறுதி ஒரு சில படிகளில் நாம் தவழ்ந்து கொண்டிருக்கின்ற வேளையில் எமக்கு கிடைத்த ஒருசில சந்தர்ப்பங்களில் இதுவும் ஒன்று அதுதான் இந்த பிக் மேட்ச்.காலத்தின் வேகத்தில் நாட்கள் கடந்து கொண்டிருக்கின்றது அதிலே எனது இந்த அனுபவத்தை தெருவிக்கின்றேன் நாங்கள் மேட்ச் பார்த்ததை விட ரோட்களில் (road) அடிதடிகளை பார்த்தது தான் அதிகம் அதிலே சில நண்பர்கள் எங்களுடைய படச் (batch) இல கமெடி பீசுகள் அதிலும் குளறிக்கொண்டு திரிவதில் அவர்களை அடிக்க ஆஸ்திரேலியாவிலும் ஆட்கள் இல்லை (சத்தியமா நான் இல்லை)


இன்னும் சில காலங்களில் நாங்கள் எமது ஸ்கூல் ஜுனிபோம்களை கழட்ட வேண்டிய காலம் வந்து விடும் முடிவோட குதித்தேன் இந்த விடயத்தில்


அன்று திங்கட்கிழமை என்று நினைக்கின்றேன் (இப்பவே மறந்து போச்சு வருங்காலத்தில்) ஸ்கூல் சென்றேன் ஒரே அதிசயம் பான்ட் ஒன்றுடன் சில நண்பர்கள் நடு வீதியில் திகைத்தேன் சிந்தித்தேன் தோன்றியது


 பிக் மேட்ச் என்று அன்றில் இருந்து இன்று வரை ஸ்கூல் class க்கு போனதில்லை போனாலும் படித்ததில்லை (வராததை வா வா என்றால் அதுவும் நானும் என்ன செய்ய நான் கூறியது படிப்பை) திங்கக்கிழமை cap collection என்று திரிய வெளிக்கிட ஆயத்தம் ஆனோம் குழம்பியது


மறுநாள் எனது நண்பர்கள் cap collection என்ன்று வெளிக்கிட போவதாக கூறினார்கள் நான் உடனேயே வீட்ட வெளிக்கிட்டு வந்து விட்டேன் (வந்து twitter இல் செப்பா இப்பவே கண்ணை கட்டுதே என்று ஒரு tweet ) அதிலே ஒருவன் ஆபீஸ் க்குள் வெடி ஒன்றை போட்டு விட்டான் அன்றும் குழம்பியது அடுத்தநாள் ஏன் வீட்ட போனது என்று class இல் இருக்க விடவில்லை

மறுநாள் எனது நண்பர்கள் வெளிக்கிடுவதாக கூறினார்கள் அன்றும் நான் வீட்ட வந்து விட்டேன் அன்றில் இருந்து எனது சந்தர்ப்பங்களை தவற விட்டு வந்தேன் அன்று ஒரு முடிவு எடுத்தேன் எப்படியாவது மட்சுக்கு போய்விட வேண்டியது தான் என்று (அன்று எடுத்ததுதான் இந்த படங்கள்)


பிறகு எமது எதிர் அணி நண்பர்கள் (jaffna hindu college) அவர்களுடன் ஒரு அனுபவம் யாழ்பாணத்தில் எத்தனை பெண்கள் பாடசாலைகள் உள்ளதோ அத்தனை பாடசாலைகளுக்கும் சென்றார்கள் என்றுதான் கூற வேண்டும் (பார்க்கின்ற hindu மாணவர்கள் எனக்கு அடிக்க வேண்டாம்)

 (படங்கள் முகப்புத்தகத்தில் எடுக்கப்பட்டது) நன்றி யாழ் hindu நண்பர்கள்
 அதிலே சென்ற இடத்தில் ஒரு கலகலப்பு என்று science hall இல் அடிபாடு சொல்லவே இனிக்கின்றது


                       (இது நினைத்தாலே இனிக்கும் படத்தின் ரீமேக் இ விட ரொம்ப நாளாக இருக்கும் ) காதல் கதையை விட

அப்படியே ஒருமாதிரி காலங்கள் சென்று வெள்ளிக்கிழமை ,சனிக்கிழமை பிக் மேட்ச் நடந்து முடிந்தது எதிலே போட்டி சமநிலையில் முடிவடைந்தது

                   என்ன ஆனந்தம் நண்பர்களுடன் கொண்டாட்டம்

நீங்கள் ஒன்றும் அவ்வளவுக்கு கற்பனை பண்ண வேண்டாம் வாசியுங்கள் பிடித்திருந்தால் வாக்களித்து செல்லுங்கள்

டைனோசர் வரலாறு பாகம் (1) dinosaur

  • undefined
    undefined
  • 0

                        இராட்சத பல்லிகள் பூமியை ஆண்ட காலம் 


மொசொசொசிக்கு யுகத்தில் வறண்ட நிலப்பகுதியில் உயிர் இனங்கள் ஆச்சரியமாகத் தோன்றி வளர்ந்தன சிறிய ஊரும் இனங்கள் (ஊர்வன)"டைனோசர் " என்ற பிரமாண்ட ராட்சத வடிவங்களாயின நம்முடைய பெரிய கற்பனைகளை கூட பிரமிக்க செய்யும் வடிவங்கள் அவை முதல் ட்டையாசிககு யுகத்தின் முதற்ப்பகுதியில் பதினைந்து அடி நீளமுள்ள சாதாரண பிராணிகளாக தொடக்கி அந்த யுகம் முடியும் போது மாபெரும் வல்லபங்களாக அவை வளர்ந்துவிட்டன டைனோசர் சற்றே மெலிந்து வேறு பல்லிகள் வந்தன வென்று புராணக்கதைகள் கூறுகின்றன வாலின் அபார வளர்ச்சி அதன் பலம் நிறைந்து இருக்கும் ஓடும் போது கிழே விழுந்துவிடாமல் அந்த பிராணியை சமநிலையாக காத்து வைத்திருப்பது இந்த வால் தான் பார்வைக்கு அவை இன்றைய ஆஸ்திரேலியாவின் கங்காரு மாதிரியே இருந்திருக்கும் ஆனால் கங்காருக்கு உரோமம் உண்டு தலையும் அந்த மாதிரி இராது 


அந்த முதல் டைனோசர்கள் வளர்ந்து அளவிலும் பழக்கத்திலும் வேறுபட்ட எத்தனையோ வகையான வடிவங்களாக மாறின அவற்றில் மிகவும் பயங்கரமானது டைரன்னுச்ராஸ் ரெக்ஸ் என்பதேயாகும் அதன் உயரம் இருபது அடி மூக்கின் நுனியில் இருந்து வாளின் அடி வரை அளந்தால் 45 அடி க்ரிட்டேசியஸ் யுகத்தை சேந்த அந்த அரக்கனோடு ஒப்பிட்டால் விலங்குகளின் அரசனான சிங்கராஜா வெறும் பூனைக்குட்டிதான் என்று தான் சொல்ல வேண்டும்


அந்த ராட்சதனுக்கு நேர் எதிராக அந்தக் காலத்தில் வேறு ஓர் ஊரும் பிராணி இருந்தது அதன் பெயர் ஆர்னிதொமைமஸ் அளவில் சிறியது மிகவும் சாது தீக்கோழி போன்ற சாயலாக இருக்கும் அந்த சாதுக்கள் புழுக்களையும் சிறு பூச்சிகளையும் உண்டு வாழ்ந்தன பல்லுக்கு பதிலாக பறவைகளின் அழகு போன்ற கொம்பு அமைந்த அலகுதான் அவற்றிற்கு இருந்தன




டைனோசர்கள் பின்னங்காலால் நடக்கும் முன்னங்காலை உண்ணவோ சண்டையிடவோ பயன்படுத்தும் இந்த டைனோசர்களை தவிர அந்தக் காலத்தில் பல்லி மாதிரி இன்னொரு பிராணி இருந்தது பல்லி என்றால் அளவில் அல்ல தோற்றத்தில் பெர்மிய யுகத்தில் வாழ்ந்த ஊரும் பிராணிகளின் நேர்ச் சந்ததிகள் இவை என்று தோன்றுகின்றன ஆனால் அதிகமாக ஓடியாட முடியாது ஜீரசிக்கு என்ற யுகத்தில் காடுகளில் திரிந்த டிப்லாடாக்கஸ் அதன் சகோதரன் ப்ராண்ட்டசராஸ் என்ற அந்தப் பிராணி ஐம்பது தொன் எடை யுள்ளது மூக்கு நுனி முதல் வாலின் அடி வரை சுமார் 100 அடி நீளம்



இதன் அடுத்த பதிப்பை அடுத்தடுத்த இடுகையில் சந்தியுங்கள் 

                                                          நன்றி 

சுமார் இந்து மாதங்களுக்கு பிறகு எனது முதல் இடுகை எனவே இதற்க்கு உங்களுடைய வாக்குகளை அளித்து செல்லுங்கள்