எங்கிருந்து வருகிறார்கள்!................

  • 0

              சிலர் ஆக்குவதற்காக சிலர் அழிப்பதற்காக பிறக்கின்றார்கள் என்னும் சிலர் கூட இருந்து குழி பறிப்பதற்காக பிறக்கிறார்கள் ஒரு சிலர் உதவி செய்வதற்காக வந்து உபத்திரம் செய்கின்றார்கள் அந்தவகையில் இந்த பூமியில் எத்தனை வித மனிதர்கள் அவர்களின் எத்தனை வித சிந்தனைகள் என்றிருக்க கூடப்பிறந்த பழக்கவழக்கங்கள் கூட
    
         இன்றைக்கு எனது கணணியை சந்தோசத்துடன் open செய்து சில நிமிடம் முகப்புத்தகம் அத்துடன் நண்பர்களுடன் அரட்டை அடித்து விட்டு மின்னஞ்சலை சரி பார்த்து பின்பு ஒரு சிறு தூக்கம் இன்றைக்கு வேற எமது கிராமத்தில் பெரு மழை அத்துடன் ஒரு வழியாக நண்பன் வீட்டை சென்று பின்பு எனது நண்பர்களுடன் மழை என்ற காரணத்தால் வெட்டி பேச்சு சில மணித்தியாலங்கள் இவ்வாறு இளமையை ஒரு அனுபவிப்பு (வாலிப வயது ; அனுபவி ராஜ அனுபவி).முடித்துவிட்டு வீட்டுக்கு சென்று தனியார் வகுப்புக்கள் இல்லாத காரணத்தால் மீண்டும் எனது கணணியை open செய்தேன் (என்ன ஒரு அதிசயம்,இது தான் ஒவ்வொரு நாளும் நடை பெறுவது).


           
                           நான் இன்றும் வழமையாக செய்வது போல சென்று கணணி விளையாட்டுக்கள் அதை முடித்துவிட்டு எனது வன்தட்டில் உள்ள பாகம் (க,த,க,ப) open செய்தேன் திடீரென எனது கண்ணில் பட்டது ஒரு குறும் தகவல் அதை அரை குறை ஆங்கிலத்தில் வாசித்தேன் அப்பொழுது அதில் இருந்தது நான் கணனியில் நச்சுநிரல்களுக்காக இடப்பட்ட்ருந்த anti -வைரஸ் எனது கோப்புக்களை எல்லாம் அழித்து விட்டது 


திகைத்தேன் வெறுமையாக காணப்பட்டது எனது கணணி (பயிரை வேலி மேஞ்சது போல) என்னுடைய கோப்புக்களை தின்றுவிட்டது நான் எனது கணணியை shutdown செய்து விட்டு எனது நண்பன் வீட்டில் இருந்து இந்த இடுகையை எழுதி இருந்தேன் நான் முடிவாக என்ன கூற விரும்புகின்றேன் என்றால் இந்த anti -virus மாதிரியே எமது உலகத்தில் எத்தனை மனிதர்கள் தங்களை நம்பி வந்தவர்களை கழுத்தறுக்கிறார்கள் நான் முதல் கூறியது போல மனிதர்களது சிந்தனைகள் சில நன்மைக்கும் சில தீமைக்கும் பயன்படுகின்றன.

  
குறிப்பு; கணணியை நம்பியோர் கை விடபடுவார் இது எனது வாழ்க்கை தத்துவம் (அடியேன் pc antivirus காக்க)
                மேலும் ஒன்று எனது கணணியை திருத்திய பின்பு மீண்டும் ஒரு இடுகையில் சந்திக்கின்றேன் என்றும் ms

துர்க்கையம்மன் மகோற்சவம்

  • 0

                         29 /08 /2011 அன்று கொடிஏற்றத்துடன் ஆரம்பித்து இன்று ரதோற்சவம் நடைபெற்றது (08 /09 /2011) இந்தவகையில் எமக்கு எல்லாம் இன்று ஒரு சந்தோசமான நாள் இன்றைக்கு கண்ணை குத்தும் அழகில் பல சாமிகள் உலாவரும் நான் கூறியது பல பெண்களின் ஊர்வலம் 

           கண் விழிக்கும் போதே கடவுள் நினைவோடெழுந்து தத்தம் கடமைகளைத் தொடங்குவது நாளாந்த நிகழ்வாகும்.  அயர்ந்து தூங்கியோர் விரைந்து எழுந்ததும் அம்மன் ஆலயமணி கேட்டதா என்றே முதலில் வினவுவர். தினமும் நிகழும் மூன்று நேரப் பூசைகளுக்கும் செல்லும் பக்தர்கள் பலர் இருந்தனர்.வருடாந்த மகோற்சவ காலங்களில் ஊரே திரண்டுவிடும்.வைகாசித் திருநாளில் பிள்ளையார் ஆலயத்திலும் மார்கழித்திருவாதிரை நாளில் அம்பாள் ஆலயத்திலும் மகோற்சவம் இறைவெய்தும்.  அம்பாள் ஆலய மகோற்சவ காலத்தில் நாட்டின் எலாப் பகுதிகளிலிருந்தும் எமது மக்கள் தவறாது வந்து கூடுவர். சித்திரத் தேரில் அம்மன் பவனிவரும் திருக்கோலக் காட்சியைக் கண்டுகளிக்கும் திருநாளில் பலநூறு மக்கள் தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றும் காட்சி பக்தி பூர்வமாக இருக்கும்.துர்க்கையம்மன் ஆலயம் கடந்த நூற்றாண்டு ஆரம்பத்தின் முன் பின்னாக எமது ஆலயமும் எப்பிடி இருந்து வந்து இன்று 2011ஆம் ஆண்டு தனது மகோற்சவத்தை வெகு விமர்சையாக கொண்டாடி முடித்துள்ளது இதன் போது வெளி நாட்டில் இருந்து கூட மக்கள் வந்து இதனை பார்த்து தமது நேர்த்திகளை முடித்துகொண்டனர் இவ் ஆலயத்தின் தேர் திருவிழா மற்றும் சப்பறம் என்பன சிறப்பாக முடிவடைந்துள்ளது இந்த ஆலயத்தில் நடை பெற்ற உற்சவங்களை பற்றி அலசுவோம்.கொடி ஏற்றம் என ஆரம்பித்து நடுவிலே வியக்கவைக்கும் திருவிழாக்களுடன் நடை பெற்று வருகின்றது.அந்த வகையில் இன்று தனது தேர் திருவிழாவை கொண்டாடிமுடித்துள்ளது 
      
சென்றமுறை திருவிழாவின் போது என்னால் எனது நண்பர்களுடன் அதனை காண முடியாமல் போனது எனக்கு மிகவும் கவலை அளிக்கின்றது சென்ற முறை நான் ஒரு பாடசாலையில் மாணவனாக இருந்தபோது எனக்கு அன்றைய தினத்தில் ஏற்ப்பட்ட ஒரு துடுப்பாட்ட போட்டிகாரணமாக நான் அங்கு சென்று நண்பர்களுடன் அனுபவிக்க முடியாமல் போனது கவலை அளிக்கிறது (நான் எனது வாழ்வில் பாதியை இழந்து விட்டேன் )

அதற்க்கு முதல்முறையும்என்னால் அங்கு சென்று தேர் திருவிழாவை காணமுடியாமல் போனது அதற்க்கான காரணம் நான் கூற விரும்பவில்லை ஆனாலும் அதற்க்கு நான் மனம் வருந்தவில்லை ஏன் எனில் நான் மற்றைய திருவிழாவிற்கு சென்று இருந்தேன் எனது சோகக்கதை நான் கூறவில்லை இவ்வாறு பலதடவை சந்தர்ப்பம் கிடைத்தும் நான் அதனை பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை (கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை). இந்த முறையும் என்னால் போக முடிய வில்லை என்னுடைய தலை எழுத்து சரியாக இல்லை 

நண்பனுக்கு பிறந்தநாள்

  • 0

ஹலோ நண்பர்களே 
சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு நபர் நானும் அந்த வகையில் இந்த வலைப்பூவில் சிறிய ஒரு மாற்றத்தை ஏற்ப்படுத்தியுளேன் முன்பு இருந்தவாறு எல்லாவற்றையும் வெறுக்கின்ற இந்த சமூகத்தில் பிறந்த படியாலும் அத்துடன் மாற்றத்தை விரும்புகின்ற இந்த உலகில் புதிய மாற்றத்துடன் உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சியளிக்கின்றது.
 எனது இந்த வலையுலகில் சிறிய சிறிய சேமித்த பதிவுகள் அத்துடன் மாறுகின்ற உலகின் நடத்தைகள் என்று சொல்லும் அளவுக்கு எனது பதிவுகள் இல்லாவிட்டாலும் என்னால் இயன்ற வரை இதனை இங்கு நான் தருகின்றேன். எனது இந்த குறிப்பினுடைய நோக்கம் இன்று எனது நண்பனின் பிறந்த நாள் அத்துடன் இந்த நாளை எனது வலையில் இட வேண்டும் என்ற அவா 
   அவனுடைய வாழ்க்கையில் பல மாற்றங்கள் அவ்வாறே எனது வாழ்விலும் எனது வலையிலும் என்றிருக்க எனது நண்பனுக்கு இந்த இடத்தில் எனது பிறந்த நாள் வாழ்த்தை கூறுகின்றேன் அவன் எதிலும் சிறப்புற்றிருக்க எனது மனம் கனிந்த வாழ்த்துக்கள் (இவ்வாறு சொன்னால் தானே ஒரு கண்டோஸ் ஆவது கிடைக்கும்) 
                                                  அவனுக்காக சிறு கவிதை 
அரும்புதல் எப்போதும் அழகானதுபூக்களின் மென்மையில்
பூரிக்காதவர்கள் இருப்பது கடினம்…
மனிதனின் பிறப்பும்மலரின் அரும்புதல் போல்தான்…ஆனால்மழலையாய் இருக்கும்போது மட்டுமே
மென்மையாய் இருக்கின்றோம்.
வளர்ச்சியின் வேகத்தில்மென்மையை இழக்கின்றோமா?!…மறக்கின்றோமா?!…எதுவோ ஒன்று…ஆனால்நாம் இறுகிப்போகின்றோம்..காலவெள்ளத்தில் சிக்கிய
கல்லாக இறுகிப்போகின்றோம்…
காற்றின்வேகத்தில் சிக்கி தவிக்கும்இலைகளாக கிழிபடுகின்றோம்…சில வேளைகளில்திசைமாறும் சிறு இலையாய்
வாழ வழிதெரியாது தவிக்கின்றோம்…
கிழிந்துபோன, இறுகிப்போனஇதயங்களும்மீண்டும் புதுமலராய்பூரிக்கத்தான் செய்கின்றது…பூக்களின் இதழ்களின் மென்மையைஉணரத்தான் செய்கின்றது…நம்பிக்கையின் ஆணிவேர் கூடபுதிதாய் நெஞ்சில்
துளிர்க்கத்தான் செய்கின்றது…
வருடம் ஒருநாள் வரும்
பிறந்த நாளில்!…
எனது நண்பனுடை பெயர் நான் குறிப்பிடவில்லை 
  என்று ஒரு கவிதை (நான் எழுதவில்லை) 
இன்று போல் என்றும், என்றென்றும்...பல்லாண்டு பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துகிறோம்!!

இது எல்லாம் இப்படியே இருக்க ஒரு முறை நண்பனுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.குறிப்பு: எனது வலை முன்பு msdmosi.blogspot.com என்றிருந்தது அனால் இன்றுமுதல் மாற்றங்களை விரும்புவதால் mosikeeran-mosi.blogspot.com என்று மாற்றப்பட்டுள்ளது.