தழுவிக்கொள்வது சரியா? தவறா?

  • 0
சினிமா படங்களில் காதலர்கள் கட்டி தழுவி கொள்கின்றனர் அதை அனைவரும் ரசித்து பார்க்கின்றனர் ஆனால் நேரில் யாராவது இருவர் கட்டி தழுவிக்கொண்டால் காலம் கெட்டுப்போச்சு கலி முத்திபோச்சு என்று பேசிக்கொள்கின்றனர் உண்மையில் தழுவிக்கொள்வது தவறான காரியமா?
                                                
                                                                                       இன்றைய காலத்தில் அன்பை வெளிப்படுத்த மலர்கள் கூட பயன் படுத்துவது கிடையாது வெறும் காகிதம் தான் அதுவும் கூட அரிது எல்லாம் செல்போன் மூலம் மெசேஜ் தான் சமுதாய விலங்கான மனிதனுக்கு அன்பும் அரவணைப்பும் அவசியமானது என்கிறது உளவியல் 
                                             
                             இந்த நாகரிக உலகில் என்ன இது புது விடையம் என்று பார்க்கிறீர்களா? நிச்சயமாக இருக்க முடியாது ஏன் எனில் மக்களின் அறிவு வளர்வதாக தெரியவில்லை கட்டி தழுவிக்கொண்டால் மக்களின் பார்வைகள் பல விதம் அதில் இது எந்த விதமோ தெரியாது.
                        
              மக்கள் முதல் முதலில் நாகரிகத்தில் காலடி எடுத்து வைத்த அந்த கணத்தில் மட்டுமல்லாது அதற்க்கு முதல் தொடக்கம் தனது அன்பை வெளிப்படுத்தி இருந்திருக்கின்றனர் ஆனால் இன்றைய உலகில் மட்டும் இந்தக்காதல் ஏன் பிரச்சனையாக உள்ளது 
                                                                   இன்றைய இளைஞர்களை, மாணவர்களை மிக அதிகமாய் பாதிக்கிற, குழப்புகிற அம்சம் “காதல்”. சிறந்த படிப்பாளிகளையும், திறமைசாலிகளையும், அறிவு ஜீவிகளையும் கூட எளிதில் தடுமாற வைத்துக் குழப்பத்தில் திணறடிக்கச் செய்வது “காதல்” மட்டுமே. காதல் விஷயத்தில் பலரும் குழப்பமடையக் காரணம்…. காதல் குறித்து தெளிவு இல்லாமல் குழம்பிய மனதுடன் காதலிக்க ஆரம்பிப்பது தான்.
                  
                         எனவே உங்கள் உறவை தழுவிக்கொள்ளுங்கள் உங்களை நேசிப்பவர்களை தழுவிக்கொள்ளுங்கள் எல்லாம் உங்களின் மனதில் நல்ல சிந்தனை இருந்தால் எல்லாம் நன்றாக நடக்கும் 
                                                         


                           எல்லாம் உங்களின் மனம் தானே 

கின்னஸ் புத்தகம் உருவான விதம்

  • 0
“கின்னஸ் புத்தகம்” எப்படி உருவானது தெரியுமா உங்களுக்கு?
1951ம் வருடம் ஒரு நாள் மாலைப்பொழுது, அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ‘கின்னஸ் வாட் சாலை என்ற அமைப்பிற்கு நிர்வாக இயக்குநராக இருந்தவர் ‘சர்க்யூ பீவர்’. இவர் வேட்டையாடுவதற்காக ஒரு நதிக் கரையோரம் சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஆகாயத்தில் ஒரு நீண்ட கோடு போல ஏராளமான பறவைகள் பறந்து சென்று கொண்டிருந்தன. அவர், உடனே அவற்றை சுட எண்ணி, குனிந்து தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்தார்.



                                                         எடுத்து நிமிர்ந்தவர் அந்தப் பறவைக்கூட்டம் கண்ணுக்கே தெரியாத தொலைவுக்குச் சென்று விட்டதை அறிந்தார். வியப்பில் உறைந்து போனார். என்ன ஒரு வேகம்! ‘கோல்டன் பிளவர்’ என்ற பறவையினம் அவை.
அப்போதுதான் அவருக்கு ஒரு சிந்தனை பளிச்சிட்டது. ஒருவேளை உலகிலேயே மிகவும் வேகமாகப் பறக்கும் பறவையினம் இவையாகத்தான் இருக்குமோ என்று எண்ணினார். பலரிடம் பல புத்தகங்களிலும் விடை தேடினார். பலன்தான் இல்லை.
இது குறித்து நாமே ஒரு புத்தகம் வெளியிட்டால் என்ன என்று யோசித்தார். அவர் உடனே லண்டன் சென்றார். அங்கு அரசாங்கத்திற்காக புள்ளி விவரங்கள் சேகரிக்கும் நோரிஸ் மைக் வைக்ட்டர், ரோஸ் மைக் வைக்ட்டர் என்ற இரட்டைச் சகோதரர்களைச் சந்தித்தார்.
தனது புதிய புத்தக யோசனையை தெரிவித்தார். அவர்களும் ஒத்துழைப்புதர முன்வந்தனர். மூவரின் உழைப்பில் பிறந்ததுதான் கின்னஸ் புத்தகம். முதல் கின்னஸ் புத்தகம் 1955ம் ஆண்டு ஆகஸ்ட் 27ல் 198 பக்கங்களுடன் அவர்களால் வெளியிடப்பட்டது.

                         உலகிலேயே மிகவும் பெரியது. மிகவும் சிறியது ஆகிய விவரங்கள் இதில் அடங்கியிருந்தன. மேலும் அவ்வாண்டு வெளியான புத்தகங்களில் அமோக விற்பனையான புத்தகம் என்ற பெருமையும் கின்னஸ் புத்தகத்திற்குக் கிடைத்தது.
அன்று தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது சாதனை புரிந்தவர்களைப் பற்றிய செய்திகளோடு புத்தகம் வெளிவந்தது. தொடர்ந்து ஆண்டுதோறும் வெளிவரும் கின்னஸ் புத்தகம் இடையில் 1957, 1959 ஆகிய இரண்டு ஆண்டுகளில் மட்டும் வெளிவரவில்லை.



                                           இதற்கான காரணம் தெரியவில்லை. தனிப்பட்ட நபரின் எந்த ஒரு புதிய சாதனையையும் கின்னஸ் புத்தகத்திற்கு அனுப்பலாம். இதற்கான தகுந்த ஆதாரங்களைக் காட்டவேண்டும் எப்படி? என பார்ப்போம்.
சாதனையாளரின் சாதனை பற்றிய பத்திரிகை செய்திகள், பார்வையாளர்களாக இருந்த பொறுப்பானவர்களின் கையெழுத்துத் தொகுப்பு, இவை உண்மைதான் என்று ஒரு பொறுப்பான நிறுவனத்தின் தலைவர் வழங்கும் உறுதிமொழி.
இவ்வளவும் அனுப்ப வேண்டும். புதிய சாதனை முந்தைய சாதனையை முறியடிப்பதற்காக இருந்தால் அந்தச் செய்தியும் சாதனையாளர் பற்றிய தகவலும் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும்.







                                        கின்னஸ் புத்தகத்தில் சாதனை நிகழ்ச்சிகளை வெளியிடுவார்களே தவிர, யாரையும் சாதனைபுரியத் தூண்டமாட்டார்கள். கின்னஸ் புத்தகம் பற்றிக் கூட கின்னஸ் புத்தகத்தில் 1974ல் இடம் பெற்றது.
அது உலகிலேயே அதிகமாக விற்பனையான புத்தகம் என்ற வரிசையில்தான். முதலில் ஆங்கிலத்தில் மட்டுமே வெளிவந்த புத்தகம் விரைவிலேயே 35 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.
                           

நன்றி உள்ள நாய்களும் நன்றி அற்ற வானரங்களும்

  • 0
இன்றைய உலகிலே புதுமைகள் நடை பெற்றாலும் அது நன்மை பயக்கும் வகையில் அமைந்தால் அது நல்லது நான் 10 , 11ம் வகுப்பு படிக்கும் போதெல்லாம் சில வானரங்களை கண்டதுண்டு அதில் சில தமது சுய புத்திகளை காட்டின இன்றைய உலகில் நாய்களுக்கு உள்ள மரியாதை கூட இன்றைய இளைய 

சமூகத்திற்கு இல்லை என்பதை கூறும் போது மிகவும் கவலையாக உள்ளது
                         
                                                                         
                                                                 நானும் ஒரு இளைய தலைமுறை என்பதால் இதனை காணுகின்ற இடத்தில் எல்லாம் மனம் படாத பாடு படுகிறது இதனை நீங்களும் செய்யாதிர்கள் இன்றைய தலை முறைக்கு சமூகத்தில் இருந்தும் எதிர்ப்பு குரல்கள் பலமாகவே கிளம்புகின்றன இவ்வாறு காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கும் என்னை போன்ற இளையர்களுக்கு இவ்வாறு ஒரு சம்பவம் வானரக்களால் ஏற்பட்டால் நடப்பது உலகிலேயே தெரிகிறது 
                                   
ஒருவரை ஒருவர் கோபத்தில் திட்டும் போது, நாயே! என்று கூறுவர். இதனால் பிரச்சனை மேலும் பெரிதாகும்.ஏனென்றால் நாய் என்பதை கேவலமாக கருதுவர் ஆனால் இந்த முது மொழிகளையும் படங்களையும் பார்த்த பின்பும் வாசிதபின்பும் இனி உங்களை நாய்கள் என்று திட்டினால் பெருமைப்படுங்கள் ஆனால் மனிதர் அல்லது மனிதருக்குரிய வேறு எதாவது பதங்களில் (குழந்தை ) என்திட்டினால் கவலைப்படுங்கள் ஏன் என்றால்!!!!!!!! 




                                                                    பார்த்தீர்களா இந்த கொடுமைகளை இனியும் யாராவது உங்களை நாய்கள் என்று திட்டினால் அவர்கள் தான் உண்மையான மனிதர்கள் (வானரங்கள்) ஏன் என்றால் எதனை தடவையும் சொல்லியும் கேட்காத இந்த மனிதர்களை வேறு எவ்வாறு சொல்வது இது இந்த விடயத்துக்கும் மட்டுமல்ல அனைத்து விடயங்களுக்கும் பொருந்தும் 
                            


                                                              இதனை கேட்ட பிறகு எல்லோரையும் நாய்கள் என்று திட்டாதிர்கள் யாரவது உங்களுக்கு அடித்தால்?


           *******               *******