உள்ளவரை சிறக்கும் நட்பு+நகைச்சுவை

  • 0

 யாரு உங்க வாக்காளர் இடத்தில் வெடி குண்டு இருப்பதாக புரளி
                        கிளப்பி விட்டது 
                   எங்க கட்சித்தலைவர் தான்
                        ஏன்?
                    வாக்காளர் இடத்தில் தூங்கிறவர்களை எழுப்ப
                                                வேறு வழி தெரியவில்லையாம்.

                             உங்கள் கட்சித்தலைவர் வீட்டுக்கு முன்னால்
                                        சாகும் வரை உண்ணாவிரதம் என்ற பலகையுடன் இருந்தீர்கலே
                                  ஏன் சீக்ககிரம் வந்துவிட்டீங்கள்?
                                             அந்த மனுசன் இப்போதைக்கு சாகிற மாதிறி தெரியவில்லை அதனால் தான்.

              என்ன இந்த இடுகையை நகைச்சுவையுடன் ஆரம்பிக்கிறேன் என்று பார்க்கிரீங்களா!
திருமண மாக்கற்றில் விலை போகாமல் தன் கையே தனக்கு உதவியென வாழ்ந்து கொண்டிருந்த எனது நண்பன் ஒருவனுக்கு எழுந்த ஒரு கற்பனை என்று சொல்வதை விட அவனது ஆவல் என்று தான் இதனை கூறமுடியும் அன்று ஒருநாள் டியூஷன் முடித்து பேருந்துக்காக பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது ஒரு ஆச்சரியம் நிகழ்ந்தது அதுதான் வருங்கால அரசியல்வாதியாக வந்து விடவேண்டும் என ஒரு நோட்டீஸ் ஒன்றை பார்த்தபடி முணுமுணுத்தான்.
                                     ................................. முடியவில்லை முடியவில்லை ...........
என்று நான் முணுமுணுத்தேன்.
                   ஏன்டா? இந்த கற்பனை தப்பா? சரியா? 
                                  இந்தமுறை உதுக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை 
நண்பா 
விக்கெட் விழுந்தா, விக்கெட் கீப்பர் சிரிப்பார்.
ஆனா,
கோல் விழுந்தா, கோல் கீப்பர் சிரிப்பாரா? 
                                                
முதலில் யோசிக்க வேண்டிய விடயம் இது. ............விட்டுவிடு அடுத்தது ஏதாவது இருக்கா 
இவ்வாறு பேசிக்கொண்டு கடைக்குள் நுழைந்தோம் அங்கேயும் முணுமுணுத்தான் நண்பா நூறு ரூபா பணம் இருக்கா 
                          நூறு ரூபாய் இருந்தா கடனா கொடுங்க....அடடா, எங்கிட்ட பணம் சுத்தமா ல்லியே....
.பரவாயில்லைங்க. அழுக்கா இருந்தாலும் கொடுங்க.

இவ்வாறு அதையும் முடித்துக்கொண்டு மீண்டும் பேருந்து நிலையத்துக்குள் நாமிருவர் நமக்கு முன் இருவர் 

                                         தெய்வீகக் காதல்னா என்னடா நண்பா?
அது வேறொண்னுமில்லடா. காமாட்சி, மீனாட்சி, விசாலாட்சின்னு பேருள்ள பொண்ணுங்களைக் காதலிக்கறது தான்டா தெய்வீகக் காதல்.


 
அந்தக்கால பார்வை நகைச்சுவையாக கிடைத்தால் இப்படி ஒரு நண்பன் கிடைக்காவிட்டால்!நண்பர்களிடம் இவ்வாறான நகைச்சுவைகள் இருந்தால் மட்டுமே அந்த நட்பு சிறக்கும்



கணத்தில் தோன்றிய நல்லூர் கந்தன் என் பார்வையில்

  • 1
                    களவுகளின் தாயகம் என்று வர்ணிக்கப்படும் நல்லூர் ஆலயம் நேற்று கொடியேற்றத்துடன் ஆரம்பிதிதுள்ளது அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் உள்ள கள்ளர்களும் சங்கமிக்கும் ஒரு மத்திய நிலையமாக தற்பாது விளங்குகிறது நல்லூர் கந்தன் ஆலயம். நாட்டினுடைய சீரான போக்குவரத்து வசதிகளும்,வெளிநாட்டவர்களின் உல்லாச வருகையும் கள்ளர்களிடையே பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அந்தவகையில் இந்தமுறை என்ன என்ன ஆட்டை நடக்கப்பேகுதோ கந்தனுக்குதான் தெரியும்.
                அதை விட கந்தன் கோவிலுக்கு வருகின்ற பெண்களுக்கு ஒரு பிற்போக்குவாதம் நடைபெறுகின்றது போல தோன்றுகின்றது அவர்கள் இனி கோவிலுக்கு வரும் போது ஆண்களால் தீர்மானிக்கப்பட்ட மரபு ஆடைகள் ஆனா சேலை ,தாவணி ,நீளப்பாவாடை சட்டை முதலியவற்றை அணிந்து வரவேண்டும் எனவும் இதை மீறி ஜீன்ஸ் ,சுரிதார்,அரைக்கால் சட்டை அணிந்து வருகின்ற தமிழ் பெண்கள் தமது பாரம்பரியத்தை மீறுபவர்களாகவும் கருதப்படுவார்கள் என்றும் அறிவித்துள்ளது இதனை நானும் எனது ஒரு நண்பனும் இணையத்தளம் ஒன்றில் வாசித்து கொண்டிருந்தபேது எனது நண்பன் என்னை ஒரு கேள்வி கேட்டான் ................. ஐயோ அதுவும் ஒரு கேள்வியா?

                                         ஏன்டா இந்த பெண்களுக்கும் மட்டும் தானே இந்தளவு பிரச்சனையும் வருகுது நானும் பிறந்ததில் இருந்து இந்த எலும்பும் தோலையும் காட்டிக்கொண்டு தானே நிக்கிறேன் எங்களுக்கு இந்த பிற்போக்கு புரட்சிகள் ஒன்று நடை பெறாத என்று?  ................. அந்தக்கணத்தில் சிந்தித்தேன் .....திகைத்தேன் 

ஆடை என்பது என்ன? நாகரிகத்தின் அடையாளமே.உடம்பை திறந்து காட்டிக் கொண்டு இந்த பிற்போக்கு சமூகத்தில் நிற்கும் ஆண்களின் உணர்வுகளை எப்பவாவது சிந்தித்ததுண்டா?
                            எடுத்த எடுப்பிலே நல்ல முடிவுகளை உதாசீனம் செய்த படியால் தான் இன்று தமிழனுக்கு இக்கதி எனக்கும் இக்கதி 

இலங்கைக் கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் வழிகாட்டலில் நல்லூர் சிறிய, நடுத்தர கைத்தொழிலாளர் சங்கம், கைத் தொழிலாளர்களுக்கான சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் நல்லூர் உற்சவ காலத்தில் வர்த்தகசந்தை ஒன்றை நடத்தவுள்ளது.
                அப்பதானே கள்ளர்களின் கை வரிசையும் அமோகமாக இருக்கும். வந்தவனுக்கு நகையும் பொருட்களும்.





           இனியும் கை வரிசை பட்டியல்கள் சிலநாட்களில் பத்திரிகைகளில் வெளிவரும் அதையும் நன்றாக கவனியுங்கள்.

blood diamond(வைர வேட்டை)+பார்த்ததில் பிடித்தது

  • 0
                                                                         இந்தப்படம் 2006 ம் ஆண்டு வெளிவந்தாலும்(blood diamond) இந்தப்படத்தை கடந்த திங்களன்று என்னால் பார்க்க முடிந்தது. இச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்த எனது நண்பன் ஆதவன் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் இந்த படத்தில் வருகின்ற நிகழ்வுகள் எல்லாத்தையும் பார்க்கின்ற பொழுதுதான் ஒரு தனி மனிதரின் வாழ்வில் உள்ள துயரங்கள், குடும்ப பாசங்கள் ,ஏழ்மை நிலை எல்லாவற்றையும் அறிய முடிகிறது 

                                      இந்த படத்தில் வருகின்ற கதாநாயகன் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.அத்துடன் titanic போன்ற வெற்றி படங்களில் நடித்த Leonardo DiCaprio வின் நடிப்பு படத்தை மேலும் வெற்றி பெறச் செய்தது
                                    ஆபிரிக்கா நாடுகளில் ஒன்றான கென்யாவில் தனது வாழ்க்கையை மேற்க்கொண்டு வரும் Solomon Vandy குடும்பத்தில் Solomon Vandy தனது மகன் மீதன நம்பிக்கையை மிகவும் வைத்திருந்தார் அத்துடன் ஒரு நாள் தனது மகனை புரட்சிகாரரிடம் தவற விட்ட Solomon Vandy தனது வாழ்வை வைர சுரங்கத்தில் களித்து கொண்டிருந்தார் அப்போது அவரின் கண்ணில் பட்டதுதான் ஒரு வைரம் அதை வைத்து கதையை மிகவும் எழிமையாக நகர்த்தி கொண்டு செல்கிறார் இயக்குனர்

                                      அப்போது அங்கு வந்த வைரம் கடத்தும் கும்பலுடன் மாட்டிக்கொள்ளும் Solomon Vandy  கதாநாயகன்  Danny Archer (Leonardo DiCaprio) யுடன் இனையும் இடதில் இயக்குனர் கதையை வெகுவாககூறியுள்ளார் அத்துடன் தனது மகன் புரட்சிகாரரிடம் சென்று தானும் அவ்வாறு மாறியதை நினைத்து Solomon Vandy படும் வேதனைகளை பட்டும் படாமலும் கூறிஉள்ளார்.அத்துடன் ஒரு பத்திரிகையாளரின் படம் என்பதையும் கூறலாம்
                            கொலையாளிகள் யார்? எதற்க்காக கடத்தப்படுகிறார்கள்? கொலை செய்யப்படும் ஆட்களின் பின்னனி என்ன என்பது விறுவிறுக்கவைக்கும் இறுதிக்காட்சி.அத்துடன் Danny Archer (Leonardo DiCaprio) ற்க்கும் Maddy Bowen (Jennifer Connelly) இடையில் மலரும் காதல் கதையை எந்த அளவுக்கு அழகியல் ரசனையோடு சொல்ல முடியுமோ அந்தளவுக்கு மென்மையாகச்சொன்னதற்காகவே இயக்குனர் 

Edward Zwick பாரட்டுக்குரியவர் ஆகிறார்.



 

  எத்தனை எத்தனை கதைகளை சொல்லுகின்ற இந்த திரைப்படத்தில் கடைசியில் கதாநாயகன் பற்றி எந்த முடிவும் கிடைக்க முடியவில்லை போல எனக்கு தோன்றுகிறது அத்துடன் யார் வென்றார்கள்? யார் தோற்றார்கள்? என்பது விசயமல்ல இந்த படம் சமூகத்திற்க்கு எவ்வளவு முக்கியமானது என்பதுதான் முக்கியம். ஒரு நாட்டினுடைய வளம் அந்த நாட்டின் வளர்ச்சிக்கு எவ்வளவு முக்கியம் என்பதையும் அதனை மற்றைய நாடுகள் சூறையாடுவதையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் கூறியுள்ளது.
                   
                அத்துடன் எனது இந்த விமர்சனத்தை முடித்துக்கொள்கிறேன்.நீங்களூம் பார்க்க வேண்டும் என்பதற்காக நானே எல்லாத்தையும் சொன்னால் அதிலே ஒரு கிக்கும் இருக்காது.
                             என்றும் (MS)
                        **********      **********