அமேசான் காடு-Amazon Rainforest

  • 2
அமேசான் படுகை என்பது தென்னமெரிக்காவில் அமேசான் ஆறும் அதன் துணையாறுகளும் பாயும் பகுதிகளைக் குறிக்கும். இதன் பெரும்பகுதி (60%) பிரேசில் நாட்டிலும், மற்றும் பெரு முதலிய நாடுகளிலும் பரந்துள்ளது. தென்னமெரிக்காவில் உள்ள அமேசான் மழைக்காடுகள் உலகிலேயே மிகப்பரந்த மழைக்காடுகள் ஆகும். இது 8,235,430 ச.கி.மீ அடர்ந்த காடுகளைக் கொண்டது. பல நூற்றாண்டுகளாக இது இப்பகுதியையும் அங்கு வாழும் உயிரினங்களையும் பாதுகாத்து வந்துள்ளது. அமேசான் ஜங்கிள் என்று அழைக்கப்படும் அமேசான் மழைக்காடு, தென் அமெரிக்காவில் அமைந்துள்ளது மற்றும் அமேசான் நதி படுகையின் உள்ளடக்கியதாக காடு இருக்கிறது. அமேசான் நதி வரையில்வெளியேற்றும் பெரிய நதியாக கருதப்படுகிறது. காட்டின் மிகவும் பெரும்பாலான பகுதி பிரேசில் (60%), பெரு (13%) மற்றும் வெனிசுலா போன்றசில நாடுகளில், கொலம்பியா, பிரஞ்சு கயானா, ஈக்வேடார், பொலிவியா,கயானா, மற்றும் சூரினாம் உள்ளது. அமேசான் மழைக்காடு உலகின் மிக பெரிய மற்றும் மிக பழமை மிக்க மழைக்காடு மற்றும் கிரகத்தின் மழைக்காடுகளில் அதிக வகையான தாவர இனங்களும் விளங்கு இனங்களும் இங்கேயே காணப்படுகிறது.

அமேசான் நதி மேற்கில் இருந்து கிழக்கு திசையில் பாயும், வரலாற்று படி, அமேசான் காடு மில்லியன் ஆண்டுகளுக்கு முதல் உருவானது.அமேசான் மழைக்காடு அல்லது Amazonia பாலூட்டிகள், மீன்,பறவைகள், ஊர்வன மற்றும் நிலநீர் வாழும் உயிரினங்களின்உள்ளடக்கியஒரு பெரிய பல்வேறு மர்மமான மற்றும் சக்தி வாய்ந்த இடமாக கருதப்படுகிறது

பலவகையான மருத்துவ குணங்கள் கொண்ட தாவரங்கள் இங்கு வளர்வதால் இங்கு பலபல மருத்துவ ஆராச்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன .அமேசான் படுகையில் 12000 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 16-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர் வருகையின் போது பலநூறு இன மக்கள் இருந்தனர். எனினும் 90 சதவீதப் பழங்குடிகள் ஐரோப்பியத் தொற்றுநோய்களின் காரணமாக ஐரோப்பிய வருகையின் முதல் நூறு ஆண்டுகளுக்குள் அழிந்து விட்டனர்.
இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதி தொடங்கி, மக்கட்தொகைப் பெருக்கம், நெடுஞ்சாலைத் திட்டம் போன்றவற்றால் காடுகள் அழிக்கப்படுகின்றன. அமேசான் படுகையில் உள்ள காடுகள் மிகவும் அடர்ந்து காணப்படுகின்றன. எனவே இங்கு பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் வாழ்கின்றன. இவை மனிதர்கள் செல்ல முடியாத அளவுக்கு அடர்த்தியாக இருப்பதால் இங்குள்ள உயிரினங்களின் எண்ணிக்கை இன்றளவும் தெளிவாக வரையறுக்கப்படவில்லை.

உலகில் பாதிக்கும் மேற்பட்ட மழைக்காடுகளும் மிகப்பெரியதும் உயிரினப் பன்மை நிறைந்ததுமான மழைக்காட்டினை அமேசான் தன்னகத்தே கொண்டுள்ளது. உலகில் வாழும் உயிரின வகைகளுள் பத்தில் ஒரு பங்கு அமேசான் மழைக்காடுகளில் வாழ்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதுவே உலகின் மிகப்பெரிய உயிரினத் தொகுப்பாகும். இப்பகுதி 2.5 மில்லியன் பூச்சியினங்களுக்கும் 10,000-க்கும் அதிகமான தாவரவகைகளுக்கும், ஏறத்தாழ 2000 பறவை, பாலூட்டிகளுக்கும் தாயகமாக விளங்குகிறது. உலகில் உள்ள அனைத்துப் பறவைகளில் ஐந்தில் ஒன்று இம்மழைக்காடுகளில் வசிக்கிறது. 


அண்டெஸ் மலைத்தொடரின் கிழக்கில் இருந்து அமேசான் மழைக்காடு தொடங்குகிறது. இதுவே உலகின் மிகப்பெரிய மழைக்காடும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்ததும் ஆகும். இது உலகில் வெளியடப்படும் கார்பன்-டை-ஆக்சைடு வளியை பெருமளவில் உட்கொள்ளும் திறன் வாய்ந்தது. இந்த மழைக்காடுகளைக் காப்பது இந்நாட்களில் முக்கிய விடயமாக இருக்கிறது.

மிகவும் ஈரப்பதம் கொண்ட அமேசான் படுகை இம்மழைக்காடுகளுக்கு அரணாக விளங்குகிறது. இப்பகுதியில் அமேசான் ஆறும் இதன் நூற்றுக்கணக்கான துணையாறுகளும் மிகவும் மெதுவாக ஓடி பின் கடலில் கலக்கின்றன.

உயிரியல் வளம் மிக்க இம்மழைக்காடு, 25 இலட்சம் வகையான பூச்சியினங்களுக்கும் ஆயிரக்கணக்கான தாவர வகைகளுக்கும் ஏறத்தாழ இரண்டாயிரம் பறவைகள், பாலூட்டிகள்ஆகியவற்றிற்கும் இருப்பிடமாக விளங்குகிறது. உலகின் மொத்தப் பறவையினங்களில் ஐந்தில் ஒரு பகுதி இக்காடுகளில் வசிக்கின்றன. அமேசான் காடுகள் பெரும்பாலும் பிரேசில்நாட்டில் அமைந்துள்ளதால், அந்நாடு உல்கிலே உருசியாவிற்கு அடுத்த இரண்டாவது பெரிய காடு வளத்தை (பரப்பளவில் 4,776,980 ச.கி.மீகள்)கொண்டதாக உள்ளது.

உலகின் உயிரினங்களில் மூன்றில் ஒரு பங்கு அமேசான் காடுகளில் வசிக்கின்றன. அமேசான் ஆற்றுப்படுகையும் மழைக்காடுகளும் 5.4 மில்லியன் சதுர கி.மீ (2.1 மில்லியன் சதுர மைல்) க்கும் மேலானதாகும். அமேசான் ஆற்றில் 3,000 க்கும் அதிகமான மீன் வகைகள் கண்டறியப்பட்டுள்ளது.

அமேசான் ஆற்று டால்பின் அமேசான் மற்றும் ஒரினோகோ ஆற்றுப் பகுதியில் வசிக்கிறது. இதுவே ஆற்று டால்பின் வகைகளில் மிகப்பெரியதாகும். இது ௦௦ அடி வரை வளரக்கூடியது.

இங்கு அதிகளவில் பிரன்கா என்ற மீன் வகை காணப்படுகிறது. இவை கூட்டமாக வாழும். இவை மாடு, மான் போன்ற உயிரினங்களை தாக்ககூடியவை. மனிதர்களும் தாக்கப்பட்டுள்ளார்கள். எனினும் சில வகை பிரன்காக்களை மனிதர்களை தாக்குகின்றன. குறிப்பாக சிவப்பு வயிற்று பிரன்கா மனிதரை தாக்கும் வகையாகும்.

அனகோண்டா வகை பாம்புகள் அமேசான் படுகையின் கரையில் காணப்படுகிறது. இது பெரிய பாம்பினங்களில் ஒன்றாகும். இவை பெரும்பாலும் நீரிலேயே வாழ்கின்றன. இதன் மூக்கு பகுதி மட்டும் நீர் மட்டத்துக்கு வெளியே இருக்கும்.



இங்கு சில தகவல்கள் விக்கிபிடியாவில் இருந்து பெறப்பட்டன் படங்கள் கூகிள் image 



பிக் மேட்ச் ஒரு கதை (big match)

  • 0
பிக் மேட்ச் ஒரு கதை

           எங்களுடைய கல்லூரிக்கதையை கனாக்காணும் காலங்கள் (விஜய் t.v)கூட கைகட்டி நின்று பார்க்க வேண்டியதுதான் எவ்வளவு சுகம் எவ்வளவு ஆனந்தம் நினைத்தாலே மனம் குளிருகின்றது


                 இது எனது இந்த இடுகையின் ஆரம்பம்


கல்லூரியின் இறுதி ஒரு சில படிகளில் நாம் தவழ்ந்து கொண்டிருக்கின்ற வேளையில் எமக்கு கிடைத்த ஒருசில சந்தர்ப்பங்களில் இதுவும் ஒன்று அதுதான் இந்த பிக் மேட்ச்.காலத்தின் வேகத்தில் நாட்கள் கடந்து கொண்டிருக்கின்றது அதிலே எனது இந்த அனுபவத்தை தெருவிக்கின்றேன் நாங்கள் மேட்ச் பார்த்ததை விட ரோட்களில் (road) அடிதடிகளை பார்த்தது தான் அதிகம் அதிலே சில நண்பர்கள் எங்களுடைய படச் (batch) இல கமெடி பீசுகள் அதிலும் குளறிக்கொண்டு திரிவதில் அவர்களை அடிக்க ஆஸ்திரேலியாவிலும் ஆட்கள் இல்லை (சத்தியமா நான் இல்லை)


இன்னும் சில காலங்களில் நாங்கள் எமது ஸ்கூல் ஜுனிபோம்களை கழட்ட வேண்டிய காலம் வந்து விடும் முடிவோட குதித்தேன் இந்த விடயத்தில்


அன்று திங்கட்கிழமை என்று நினைக்கின்றேன் (இப்பவே மறந்து போச்சு வருங்காலத்தில்) ஸ்கூல் சென்றேன் ஒரே அதிசயம் பான்ட் ஒன்றுடன் சில நண்பர்கள் நடு வீதியில் திகைத்தேன் சிந்தித்தேன் தோன்றியது


 பிக் மேட்ச் என்று அன்றில் இருந்து இன்று வரை ஸ்கூல் class க்கு போனதில்லை போனாலும் படித்ததில்லை (வராததை வா வா என்றால் அதுவும் நானும் என்ன செய்ய நான் கூறியது படிப்பை) திங்கக்கிழமை cap collection என்று திரிய வெளிக்கிட ஆயத்தம் ஆனோம் குழம்பியது


மறுநாள் எனது நண்பர்கள் cap collection என்ன்று வெளிக்கிட போவதாக கூறினார்கள் நான் உடனேயே வீட்ட வெளிக்கிட்டு வந்து விட்டேன் (வந்து twitter இல் செப்பா இப்பவே கண்ணை கட்டுதே என்று ஒரு tweet ) அதிலே ஒருவன் ஆபீஸ் க்குள் வெடி ஒன்றை போட்டு விட்டான் அன்றும் குழம்பியது அடுத்தநாள் ஏன் வீட்ட போனது என்று class இல் இருக்க விடவில்லை

மறுநாள் எனது நண்பர்கள் வெளிக்கிடுவதாக கூறினார்கள் அன்றும் நான் வீட்ட வந்து விட்டேன் அன்றில் இருந்து எனது சந்தர்ப்பங்களை தவற விட்டு வந்தேன் அன்று ஒரு முடிவு எடுத்தேன் எப்படியாவது மட்சுக்கு போய்விட வேண்டியது தான் என்று (அன்று எடுத்ததுதான் இந்த படங்கள்)


பிறகு எமது எதிர் அணி நண்பர்கள் (jaffna hindu college) அவர்களுடன் ஒரு அனுபவம் யாழ்பாணத்தில் எத்தனை பெண்கள் பாடசாலைகள் உள்ளதோ அத்தனை பாடசாலைகளுக்கும் சென்றார்கள் என்றுதான் கூற வேண்டும் (பார்க்கின்ற hindu மாணவர்கள் எனக்கு அடிக்க வேண்டாம்)

 (படங்கள் முகப்புத்தகத்தில் எடுக்கப்பட்டது) நன்றி யாழ் hindu நண்பர்கள்
 அதிலே சென்ற இடத்தில் ஒரு கலகலப்பு என்று science hall இல் அடிபாடு சொல்லவே இனிக்கின்றது


                       (இது நினைத்தாலே இனிக்கும் படத்தின் ரீமேக் இ விட ரொம்ப நாளாக இருக்கும் ) காதல் கதையை விட

அப்படியே ஒருமாதிரி காலங்கள் சென்று வெள்ளிக்கிழமை ,சனிக்கிழமை பிக் மேட்ச் நடந்து முடிந்தது எதிலே போட்டி சமநிலையில் முடிவடைந்தது

                   என்ன ஆனந்தம் நண்பர்களுடன் கொண்டாட்டம்

நீங்கள் ஒன்றும் அவ்வளவுக்கு கற்பனை பண்ண வேண்டாம் வாசியுங்கள் பிடித்திருந்தால் வாக்களித்து செல்லுங்கள்